தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 9 ஆம் தேதி, பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்று வந்த நட்சத்திர ஜோடி, இந்தியா வந்து மீண்டும் தங்களுடைய சினிமா வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினர்.
இதற்கிடையில் திருமணத்திற்கு பின்னர் காதல் கணவர் பிறந்தநாளை, மாமியார், நாத்தனார் போன்ற குடும்ப உறவினர்களுடன் துபாயில் கொண்டாடினார் நயன்தாரா.
சமீபத்தில் நயன்தாரா சினிமா துறையில் இருந்து முழுமையாக விலகி குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களின் குழந்தைகள் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில் நானும் நயனும் தற்போது அப்பா, அம்மா ஆகியுள்ளோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தனர். எங்களின் உயிர் மற்றும் உலகத்திற்கு உங்களின் ஆசிர்வாதம் வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது ரசிகர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துகளை பொழிந்த வண்ணம் உள்ளனர். மேலும் சிலர் வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் கூறி வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust