பொன்னி நதி  யூடியூப்
சினிமா

பொன்னியின் செல்வன் பொன்னி நதி : தமிழில் 53 லட்சம் வியூஸ் - மற்ற மொழிகளில் எவ்வளவு?

ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள பொன்னி நதி பாடலை தமிழில் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். தெலுங்கில் அனந்தா ஸ்ரீராம், கன்னடத்தில் ஜயந்த் கைகினி, மலையாளத்தில் ரஃபீக் அகமது, மற்றும் இந்தியில் மெஹபூப் கோட்வால் ஆகியோர் எழுதியுள்ளனர்.

Keerthanaa R

அமரர் கல்கி எழுதிய வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் கார்திதி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், முதல் பாடல் படம் வெளியாகவுள்ள 5 மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நேற்று மாலை டிப்ஸ் யூடியூப் சேனலில் வெளியிட்ட பாடல்கள் வெளியானது முதல் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. இதுவரை தமிழில் பொன்னி நதி பாடல் 5,444,907 பார்வைகளைப் பெற்றுள்ளது. தெலுங்கில் 1,456,253 பார்வைகளும், கன்னடத்தில் 217,612 பார்வைகளும் பெற்றுள்ளது இந்த first single. மேலும் இந்தியில் இதுவரை 1,231,855 வியூக்களை கடந்துள்ள 'காவேரி ஸே மில்னே' (பொன்னி நதி) பாடல், மலையாளத்தில் 355,479 வியூக்களை பெற்றுள்ளது.

தமிழில் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் பொன்னி நதி பாடலை எழுதியுள்ளார். தெலுங்கில் அனந்தா ஸ்ரீராம், கன்னடத்தில் ஜயந்த் கைகினி, மலையாளத்தில் ரஃபீக் அகமது, மற்றும் இந்தியில் மெஹபூப் கோட்வால் ஆகியோர் எழுதியுள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரஹ்மான் பாடியிருக்க, மலையாளத்தில் அல்போன்ஸ் ஜோசப் மற்றும் கன்னடத்தில் நகுல் அப்யங்கர் ஆகியோர் பாடியுள்ளனர்.

நேற்று வெளியிடப்பட்டது முதல் அதிக பார்வைகளை தமிழ் பாடல் பெற்றுள்ளது. குறைந்தபட்சமான வியூக்களை கன்னட பாடல் பெற்றுள்ளது.

பொன்னியின் செல்வன் நாவலின் தொடக்கத்தில் வாணர் குல வீரன் வந்தியத்தேவன் ஆடி 18ஆம் திருநாள் கொண்டாட்டத்தின் போது தஞ்சை நோக்கிய பயணத்தில் வீர நாராயண ஏரிக் கரையோரமாக தன் குதிரையின் மேல் வருவான். வந்தியத்தேவனின் இந்த பயணம் குறித்த பாடலாகவும், படத்தில் இடம்பெறும் முதல் பாடலாகவும் இருக்க வாய்ப்புகள் இருக்கிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?