பொன்னியின் செல்வன், இம்சை அரசன் Twitter
சினிமா

பொன்னியின் செல்வன் - இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி - என்ன இப்படி ஒரு தொடர்பா?

Antony Ajay R

இன்று பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது. அருண்மொழிவர்மனா? அருள்மொழிவர்மனா? எனத் தொடங்கி பல சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்திருக்கின்றன.

இரண்டு பாகங்களாக வெளிவர உள்ள இந்தப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில், விக்ரம் பிரபு, நிழல்கள் ரவி, லால், ஜெயராம், பிரபு, ரியாஸ் கான், கிஷோர், அஸ்வின், அஸ்வின் ராவ் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள்.

விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.


இப்படத்தின் டீஸர் வெளியீடு நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது.

மணிரத்னம் பேச்சு

இந்த நிகழ்ச்சியின் பேசிய மணிரத்னம், “கல்லூரி படிக்கும் போது இந்த நாவலை படித்தேன். முதலின் என் நன்றியை கல்கிக்கு தெரிவித்துக் கொள்கிறேன். கிட்டதட்ட 40 ஆண்டுகளாக இதை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறேன். முதலில் மக்கள் திலகம் எம்ஜிஆர் இந்த படத்தை எடுத்திருக்க வேண்டியது. ஆனால் அவர் ஏன் எடுக்கவில்லை இப்போது தான் புரிகிறது.

எங்களுக்காக அதை விட்டு வைத்து விட்டு சென்றுள்ளார் என புரிந்துள்ளது. பல பேர் பொன்னியின் செல்வன் படம் எடுக்க முயன்ற நிலையில் நானே 3 தடவை முயன்றுள்ளேன். அதனால் இதன் மதிப்பு எனக்கு தெரியும். கொரோனா சமயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முழுக்க முழுக்க ஒரு அழுத்தத்தில் தான் எடுக்க முடிந்தது. இவர்கள் அனைவரின் ஒத்துழைப்பு இல்லையென்றால் பொன்னியின் செல்வன் இல்லை,” என்று கூறினார்.

கார்த்தி பேச்சு

வரலாறு தெரியாதவர்களால், வரலாறு படைக்க முடியாது என நடிகர் கார்த்தி இந்நிகழ்வில் பேசினார்.

அவர், “நாமெல்லாம் வரலாறு வகுப்புனு சொன்னாலே தூங்குவோம். நானெல்லாம் தூங்குறத மாதிரி தெரியாம தூங்குவேன். கொஞ்ச நேரம் கவனிப்போம்.அந்த மாதிரி கொஞ்ச நேரம் கவனிதத் நேரத்தில் இவர்களை பற்றி தெரிந்திருப்போம். அப்படி தெரிந்திருந்தும் நான் தமிழன் தமிழன் என கூறுவோம். என்னடா பண்ணாங்கனு கேட்ட தெரியாது. இந்தப் படத்தில் நம் முன்னோர்கள் என்ன பண்ணினார்கள் என தெரியும்,” என்று பேசினார்.

இம்சை அரசன், பொன்னியின் செல்வன் தொடர்பு

சரி.. இந்த இரண்டு திரைப்படத்திற்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?

இதே நாளில்தான் 2006 ஆம் ஆண்டு சங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் நடிப்பு அசுரன் வடிவேலு நடிப்பில் உருவான இம்சை அரசன் படம் வெளியானது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?