நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் மரணமடைந்ததாக நேற்று அவரது இன்ஸ்டாகிராம் போஸ்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
32 வயதாகும் பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக மரணமடைந்ததாக அவரது மேனேஜர் இதனைப் பதிவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்று பூனம் பாண்டே வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில் “நான் உயிருடன் இருக்கிறேன். நான் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறக்கவில்லை. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் உயிரிழக்கும் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான பெண்களைப் பற்றி என்னால் சொல்ல முடியாது என்பதால் இதைச் செய்ததாகவும்” வீடியோவில் பேசியிருக்கிறார்.
"எனது இறப்புச் செய்தி அறிந்து கண்ணீர் சிந்தியவர்களுக்காக நான் வருந்துகிறேன், எனது நோக்கம் நாம் அதிகம் பேசப்படாத ஒரு விஷயத்தைப் பற்றி அதிர்ச்சிகொடுத்து பேசவைப்பதே" என குறிப்பிட்டிருக்கிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust