செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சீரியலில் நடித்து பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர், 'மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
கடைக்குட்டி சிங்கம், யானை, மாபியா, ஓமணப்பெண்ணே, மான்ஸ்டர், குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இந்தியன் 2-ம் பாகம், அகிலன், ருத்ரன், டிமாண்டி காலனி 2-ம் பாகம், பத்து தல உள்ளிட்ட படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் அவ்வபோது புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.
இந்நிலையில் பிரியா பவானி சங்கர் கூறியதாக ஒரு கருத்து வெளியானது.
சமீபத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் "சினிமாவிற்கு வரும் போது ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா, இல்லையா என்று கவலைப்படவில்லை. நடித்தால் பணம் வருகிறது என்று நினைத்தேன். அதற்காகவே நடித்தேன்" என்று கூறியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இந்த செய்திக்கு விளக்கமளித்து அவர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், "மாப்ள சொம்பு கொடுத்தா தான் தாலி கட்டுவாறாம் அப்படிங்கிற mode ல ஊடகங்கள் உள்ளன.
நான் சொன்னதாக பரவும் செய்திகள் பொய்யானவை, நான் அப்படி சொல்லவே இல்லை. அப்படியே இதை நான் சொல்லியிருந்தாலும் அதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை.
நான் பணத்திற்காக தான் வேலை செய்கிறேன். எல்லோரும் பணத்திற்காக தான் வேலை செய்கிறார்கள். ஆனால், இது ஒரு நடிகரிடம் இருந்து வரும்போது ஏன் தரக்குறைவாக பார்க்கப்படுகிறது. என்னுடைய பாதையில் யாரும் தலையிட நான் விரும்பவில்லை” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust