இளைய ராஜா Twitter
சினிமா

'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' தீம் மியூசிக் போட்ட இளையராஜா - வைரல் வீடியோ

Antony Ajay R

“ராஜா கையவச்சா… அது ஸ்ட்ரேஞ்சா போனதில்ல” என்ற தலைப்போடு இளையராஜா ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் வானிலிருந்து வரும் ஸ்ட்ரேஞ்சான ஒன்றை இளையராஜா இசை மூலம் கட்டிப்படுத்துவது போலக் காட்டப்படுகிறது.

இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் 'இது தான்யா எங்க ஏஸ்தெடிக் ராஜா’ என கமன்ட் செய்து வருகின்றனர். இதன் வீடியோவின் மூலம் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் 4வது சீசனில் ராஜாவின் பங்களிப்பு இருப்பது உறுதியாகியிருக்கிறது. ஆனால் அது எந்த வகையில் எனத் தெரியவில்லை.

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தீம் மியூசிக்கை தன் பாணியில் போட்டிருக்கிறார் இளையராஜா. தனது சொந்த இசையை தவிர மற்ற மியூசிக்கை இசைப்பது ராஜாவின் வழக்கம் இல்லை. ஆனால் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீரிஸில் பங்களித்து புதிய இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார் ராஜா.

Netflix -க்கு கை கொடுக்குமா Stranger Things

கடந்த 6 மாதங்களில் ஏகப்பட்ட அடி வாங்கியிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். லாக் டவுன் காலத்தில் அதிகரித்த பயனர்களைத் தக்க வைக்கும் போட்டியில் தோற்றுப்போனது நெட்ஃப்ளிக்ஸ். இதனால் அதிக பயனர்களை இழந்தது. சமீபத்திய விலையேற்றம் இன்னும் பின்னடைவானது.

ஆங்கில படங்கள், டாக்குமென்டரிகளில் கலக்கினாலும் தமிழ், தெலுங்கு போன்ற பிராந்திய மொழிகளில் சுவாரஸ்யமான கன்டென்ட்களை வழங்கத் தவறியது நெட்ஃப்ளிக்ஸ்.

இதனால் பிராந்திய படங்களை வாங்கும் பழக்கத்தை விடுத்து நமக்கு வருவதைச் செய்வோம் என நெட்ஃப்ளிக்ஸ் இறங்கிவிட்டதாகக் கூறப்படுகின்றது. அந்த வகையில் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் எனும் அமெரிக்கத் தொடருக்குள் தமிழ் ரசிகர்களை எடுத்துச் செல்லும் முயற்சியாக இளையராஜா இசை பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன் ஆர்.ஜே.பாலாஜியை வைத்து ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் ரீகேப் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எக்காலத்துக்குமானவர் ராஜா என்பதை 2கே ராஜா ரசிகர்கள் நிரூபித்தனர். ஆனால் எல்லா நாட்டுக்குத்தானவர் ராஜா என்பதைக் காட்டுகிறது இந்த வீடியோ. அமெரிக்க சீரிஸாக இருந்தாலும் ராஜாவின் இசைபொருந்துவதில் வியப்பொன்றும் இல்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?