ரஜினிகாந்த் : Thalaivar 170 படத்தை இயக்கும் ஜெய்பீம் இயக்குநர் டிவிட்டர்
சினிமா

ரஜினிகாந்த் : Thalaivar 170 படத்தை இயக்கும் ஜெய்பீம் இயக்குநர் - ராக்ஸ்டார் இசையாம்ல!

Antony Ajay R

#Thalaivar170 இணையத்தில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. ஆம், ரஜினி காந்த் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது லைகா தயாரிப்பு நிறுவனம்.

2021ம் ஆண்டு வெளியாகி விமர்சனரீதியாக பெரும் பாராட்டைப் பெற்ற திரைப்படம் ஜெய்பீம். இதன் இயக்குநரான ஞானவேல் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை இயக்குகிறார்.

இவர் பல விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் மூலம் அறிமுகமான ஞானவேலுக்கு 3வது படமாக தலைவர்170 கிடைத்திருப்பது மிகப் பெரிய வாய்ப்பாக கருதலாம்.

ஏற்கெனவே பொன்னியின் செல்வன், இந்தியன் 2 படங்களில் பங்கேற்றிருக்கும் லைகாவின் அடுத்த பெரிய அறிவிப்பாக தலைவர்170 பார்க்கப்படுகிறது.

இந்த படத்துக்கு அனிரூத் இசையமைக்கிறார். பேட்ட, தர்பார் போன்ற படங்கள் ஏற்கெனவே அனிரூத் - ரஜினிகாந்த் காம்போவில் மிகப் பெரிய ஹிட் ஆகின.

தவிர, நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்துக்கும் அனிரூத் இசையமைக்கும் நிலையில் 4வது முறையாக ரஜினிகாந்துடன் இணைகிறார்.

ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் திரைப்படம் அரசியல் ரீதியாக விமர்சிக்கப்பட்டது. இது, பழங்குடி மக்களான இருளர்கள் சமூகத்தில் ஒடுக்கப்படுவதையும், அவர்கள் அதிகாரவர்கத்தினரால் துன்புறுத்தப்படுவதையும் படம் பேசியது.

இந்த படத்துக்கு பலர் ஆதரவும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். குறிப்பாக அந்த படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்தாலும், சில புறம்பான விஷயங்கள் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.

ஏற்கெனவே ரஜினிகாந்த் காலா, கபாலி போன்ற அரசியல் படங்களின் மூலம் பெரிய ஹிட்களைக் கொடுத்துள்ளார். இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?