நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க சென்னையில் இருந்து சுமார் 55 நாட்கள் நடைப்பயணமாக சென்று அவரை நேரில் பார்த்துள்ளார் ரசிகர் ஒருவர்.
பிரபல தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ரஜினிகாந்த். சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களாலும் திரைப்பிரபலங்களாலும் அழைக்கப்படுகிறார்.
நடிப்பை தாண்டி, ரஜினிகாந்த் அவ்வப்போது இமயமலைக்கு சென்று வருவார். குறிப்பாக ஒவ்வொரு படம் முடிந்த பின்னரும், செல்வார் என்பதை அறிவோம்.
ஜெயிலர் படம் முடிந்து வெளியாவதற்கு முன் ரஜினி இமயமலைக்கு புறப்பட்டார்.
அங்குள்ள மகாவதார் பாபாஜி குகையில் தியானம் செய்வார் ரஜினி. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க அவரது தீவிர ரசிகர் ஒருவரும் இமயத்திற்கு சென்றுள்ளார்.
கிட்ட தட்ட 55 நாட்களாக நடைப்பயணமாக சென்று ரஜினியை சந்தித்திருக்கிறார். ரசிகரை சந்தித்து பேசிய ரஜினி, அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.
மேலும் ரசிகருக்கு பண உதவிகள் செய்த நடிகர் அங்கு அவர் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்துகொடுத்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி இமயமலைக்கு புறப்பட்ட ரஜினிகாந்த், ஒரு வாரக் காலம் தன் ஆன்மீக பயணத்தை மேற்கொண்டார். மகாவதார் பாபா குகை, பத்ரிநாத் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றார்
ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது ஜெய் பீம் திரைப்பட இயக்குநரின் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்கிறார் ரஜினிகாந்த்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust