Ranveer Singh shuts down separation rumours with Deepika Padukone  Twitter
சினிமா

ரன்வீர் சிங் - தீபிகா படுகோனேக்கு விவாகரத்தா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்

Priyadharshini R

தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் இருவரும் விவாகரத்து செய்ய போவதாக பரவிய வதந்திகளுக்கு ரன்வீர் தனது டிவிட்டரில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே பாலிவுட்டில் மிகவும் அபிமான ஜோடிகளில் ஒருவர்.

கடந்த சில வாரங்களாக, தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் பிரிய போவதாக வதந்திகள் பரவி வருகின்றன. இருப்பினும், இருவரும் வதந்திகளை நிராகரித்தனர்.

ranveer singh

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனே ஆகிய இருவரும் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.

அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக தீபிகா படுகோனே இருந்து வருகிறார், இந்த இரண்டு பிரபலங்களும் தற்போது பிஸியாக இருந்து வருகின்றனர்.

இதற்கிடையில் நகை மற்றும் வாட்ச் பிராண்டினா கார்டியரின் பிராண்ட் அம்பாசிடராக தீபிகா நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து ரன்வீர் தனது மனைவி தீபிகாவை 'மை குயின்' என்ற கேப்ஷனுடன் பதிவை பகிர்ந்து பிரியபோவதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும் விரைவில் ஒரு படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?