Ranveer Singh Twitter
சினிமா

ரன்வீர் சிங்: இணையத்தில் வைரலான நிர்வாண போட்டோஷூட் - பின்னணி என்ன?

NewsSense Editorial Team

நடிகைகள், மாடல்கள் பத்திரிகைகளுக்கு நிர்வாணமாகப் போட்டோ ஷுட் கொடுப்பது ஹாலிவுட் வட்டாரத்தில் பரவலாக நடக்கும் ஒன்று. இந்தியாவிலும் சில மாடல்கள் இதுபோல போட்டோஷுட் எடுத்திருக்கின்றனர். சில நடிகைகளும்,அரை நிர்வாணமாகப் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். தாய்மை அடைந்த போது, கருவுற்ற காலத்தில், பெண்களை உடல் சார்ந்து பார்க்கும் போக்கைக் கண்டித்து என பல்வேறு விதமான போட்டோஷுட் எடுத்திருக்கின்றனர்.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் எடுத்திருக்கும் நிர்வாண போட்டோஷுட் தற்போது வைரலாகி வருகிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களில், தன் தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரன்வீர். வித்தியாசமான ஆடைகள் அணிந்து விருது விழாவுக்குச் செல்வதும், போட்டோஷுட் எடுப்பதும் அவரின் வழக்கம்.

தற்போது பத்திரிகை ஒன்றுக்காக ரன்வீர் சிங் நிர்வாணமாக போட்டோஷுட் எடுத்துக் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்தப் பத்திரிகையில் ரன்வீர் சிங்கின் பேட்டியும் இடம் பெற்றிருக்கிறது. அந்த பேட்டியில், திரைப்படம், பேஷன் உட்படப் பல விஷயங்கள் குறித்துப் பேசியிருக்கிறார் அவர்.

சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கும் ரன்வீர் சிங்கின் இந்தப் புகைப்படங்கள் குறித்து ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது கலாச்சார சீர்கேடு, ஆண் இப்படிப் புகைப்படமெடுக்கலாமா?, என்பது போன்ற கருத்துகளைச் சிலர் தெரிவித்து வருகின்றனர். மற்றொருபுறம் ரன்வீர் சிங்கின் இந்த துணிச்சல் பாராட்டுக்குரியது எனவும் சிலர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?