Harry Potter வெள்ளி விழாவைக் கொண்டாட நாணயம் வெளியிட்டு அசத்திய அரசு! Twitter
சினிமா

Harry Potter வெள்ளி விழாவைக் கொண்டாட நாணயம் வெளியிட்டு அசத்திய அரசு!

Antony Ajay R

உலக பிரசித்தி பெற்ற பாட்டர் கதையை கொண்டாடும் வகையில் இங்கிலாந்தின் நாணய சாலை ஹாரிபாட்டர் நாணயங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

'ஹாரி பாட்டர் அண்ட் தி பிலாசபர் ஸ்டோன்' என்ற கதையை 1997ம் ஆண்டு ஜெ.கே.ரோலிங் என்பவர் எழுதியிருந்தார். ஹாரி பாட்டரின் வாழ்க்கை மற்றும் மாயாஜால பள்ளியை விவரிக்கும் வகையில் அந்த கதை அமைந்திருக்கும்.

இந்த கதையின் 25 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வகையில் இங்கிலாந்தில் நாணயம் வெளியாகியுள்ளது.

இந்த நாணயத்தில் ஹாரி பாட்டரின் முகம் மட்டுமல்லாமல் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் புதிய அரசர் சார்லஸ் ஆகியோரின் முகங்களும் இடம் பெற்றிருக்கும்.

ஹாரிபாட்டர் முகம் பொரித்த நாணயம் போலவே கதையின் முக்கிய பாத்திரமான ஆல்பஸ் டம்புல்டோர் மற்றும் ஹாக்வார்ட்ஸ் பள்ளியின் படம் பொரித்த நாணயங்களும் வெளியிடப்படுமாம்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த நாணயங்கள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மிக குறைந்த நாணயங்களே வெளியிடப்படும். இவற்றை ஜிம் கே என்பவர் வடிவமைத்துள்ளார்.

முதலில் 50 பவுண்ட் நாணயங்கள் வெளியிடப்படுகின்றன.

ஒரு கதை அரசு நாணயங்களில் இடம் பெரும் அளவு பிரசித்தி பெற்றிருப்பது ஆச்சரியமளிக்கும் ஒன்றாக இருக்கிறது.

ஹாரி பாட்டர் படங்களும் பெருவெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?