சமந்தா

 

Twitter

சினிமா

"உடையை வைத்து தான் மதிப்பீடா?" பச்சை உடை விவகாரம், பதிலடி கொடுத்த சமந்தா!

விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அங்கு அணிந்திருந்த லோ நெக் உடைக்கு வந்த நெகட்டிவ் கமெண்ட்களுக்கா இன்ஸ்டாவில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டு பதிலளித்துள்ளார்.

Antony Ajay R

சமந்தாவின் சமீபத்திய புகைப்படங்களுக்கு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கமெண்ட்கள் வந்த வண்ணம் இருக்க, எதிர்மறை கமெண்ட்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீசில் பதிலடி தந்துள்ளார் சமந்தா.

முன்னணி நடிகையான சமந்தா சில மாத காலமாக சினிமா ரசிகர்களிடையே பேச்சு பொருளாக இருக்கிறார். ஃபமிலி மேன் சர்ச்சையைத் தொடர்ந்து இவரின் விவாகரத்து, புஷ்பா பாடல் என சர்ச்சைகள் தொடர தற்போது புதிதாக கிளம்பியிருக்கிறது கிளாமர் சர்ச்சை.

samantha

தன் 12 ஆண்டு கால சினிமா வாழ்வின் தொடக்கத்தில் இருந்தே கவர்ச்சியான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் சமந்தா. சமீபத்தில் இவர் நடித்த விளம்பர படங்களில் கவர்ச்சியான உடைகள் அணிகிறார். இதற்கு நெகட்டிவ் கமெண்ட்களும் வருகின்றன. விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அங்கு அணிந்திருந்த லோ நெக் உடைக்கு வந்த நெகட்டிவ் கமெண்ட்களுக்கா இன்ஸ்டாவில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டு பதிலளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

"ஒரு பெண்ணாக பெண்கள் சமூகத்தில் மதிப்பிடப்படுவதை நான் அறிந்திருக்கிறேன். ஒரு பெண்னை அவரின் உடை, இனம், கல்வி, சமூக நிலை, தோற்றம், தோலின் நிறம் போன்றவற்றால் மதிப்பிடுகின்றனர். உடையின் கழுத்து இறக்கம், கால் இறக்கம் போன்றவற்றால் பெண்கள் மதிப்பிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும்" என கூறியுள்ளார்.

இது போன்று பல முறை சமந்தா நெகட்டிவ் கமெண்களுக்கு பதில் கொடுத்துவிட்டார். நெகட்டிவிஸ்ட்கள் ஒரு பக்கம் இருந்தாலும் ரசிகர்கள் என்னவோ காத்துவாக்குல ரெண்டு காதலுக்காக தான் காத்திருக்கின்றனர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?