Samantha Ruth Prabhu
Samantha Ruth Prabhu Twitter
சினிமா

சமந்தாவின் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் ஹேக் : ரசிகர்களை குழப்பிய பதிவு - அப்படி என்ன post?

Keerthanaa R

சமூகவலைத்தளங்களின் வளர்ச்சியால், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற முக்கிய புள்ளிகலூடனான தொடர்பும், அவர்களது வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களும் மிக எளிதாக சாதாரண மக்களுக்கு வந்தடைகிறது.

பிரபலங்கள் அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்கள் ரசிகர்களுக்கு ஷேர் செய்து வருகிறார்கள். அவர்களுடன் உரையாடுகிறார்கள். இது ஒரு வித வளர்ச்சிக்கான பாதை தான் என்றாலும், பல நேரங்களில் ஒருவரது Privacy-ஐ குலைக்கும் ஒரு கருவியாகவும் இவை இருப்பது தவிர்க்க முடியாத உண்மையே.

இந்நிலையில், சமந்தாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை 4 ஆம் தேதி இரவு சமந்தாவின் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்டில் பகிரப்பட்ட ஒரு புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக அவரது ஃபோட்டோஷூட் அல்லது வேலை சார்ந்த புகைப்படங்கள், வீடியோக்கள் மட்டுமே அதிகம் அந்த அக்கவுன்ட்டில் பகிரப்பட்டு வந்தது.

இதற்கிடையில், நேற்றிரவு ஒருவரது புகைப்படத்தை பகிர்ந்து, "எப்போதும் என் நண்பர்கள் எனக்காக இருப்பார்கள்" என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

வழக்கத்திற்கு மாறாக இருந்த, இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. பலரும் சமந்தா ஏன் இந்த பதிவை பகிர்ந்துள்ளார் என்று குழம்ப, இன்னும் ஒரு சிலர், ஒரு வேளை அவரது அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டதோ என்று சந்தேகப்பட்டனர்.


சிறிது நேரத்திலேயே அவரது அக்கவுன்ட் மேலாளர் ஷேஷாங்கா பினேஷ், விரைந்து செயல்பட்டு, அந்த பதிவை அகற்றினார். பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இது தொழில்நுட்ப கோளாரால் ஏற்பட்ட பிழை என்றும், இதை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் விளக்கமளித்திருந்தார். மேலும் ஏற்பட்ட குழப்பத்திற்கு மன்னிக்க வேண்டும் என்றும் பதிவிட்டிருந்தார் ஷேஷாங்கா .

இவை எல்லாம் ஒரு புறம் இருக்க, சமந்தா நடித்த ஓ பேபி திரைப்படம் வெளியாகி மூன்று வருடங்கள் முடிந்துள்ளது. இதை தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து சமந்தா கொண்டாடி வருகிறார். தற்போது குஷி என்ற படத்தில் நடித்து வரும் இவர், அடுத்து யஷோதா என்ற படத்திலும் நடிக்கிறார்.

மேலும் சகுந்தலம், ஹாலிவுட்டில் Arrangements of Love திரைப்படம் என படு பிஸியாக இருக்கும் சமந்தா, பாலிவுட் இயக்குநர் கரன் ஜோஹரின் பிரபல டாக் ஷோ காஃபி வித் கரனில் பங்கேற்றுள்ளார். ஏழாவது சீசனின் துவக்க எபிசோட் ஆன இது, இந்த வாரம் வெளியாகவுள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?