Simbu and Vijay Sethupathi Twitter
சினிமா

விஜய் சேதுபதியுடன் மோதும் சிலம்பரசன் - ஹன்சிகாவின் "மகா" vs காத்துவாக்குல ரெண்டு காதல்

Antony Ajay R

கொரோனா பரவல் தொடங்கியது முதல் படங்கள் எதுவும் வராததால் ஹன்சிகா மோத்வானி முன்னணி கதாநாயகி அந்தஸ்தை இழந்து வரும் சூழலில் உள்ளார். அவுட் டேட்டட் ஆகிவிடாமல் தக்க வைத்துக் கொள்ளப் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து யு.ஆர். ஜமீல் இயக்கும் மகா திரைப்படம் கிடைத்திருக்கிறது. ஆண்டுக்கணக்கான இடைவெளிக்குப் பின்னர் இந்தப்படம் வருவதால் ரசிகர்களிடம் எந்த மாதிரியான வரவேற்பு இருக்கும் என்பது கணிக்க முடியாததாக உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் ஹன்சிகாவுக்கு கைக் கொடுத்துள்ளார் அவரது முன்னாள் காதலர் சிலம்பரசன். இந்த படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். அவர்களின் பிரேக்கப்புக்கு பின்னர் இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Maha

ஏற்கெனவே மகா படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி சுமாரான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹன்சிகாவின் 50வது படமாக வெளிவரும் மகா நிச்சயம் ஸ்பெஷலான வெற்றியைப் பெற்றுத்தரும் என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்தப் படத்தை, எலெட்க்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் வி. மதியழகன், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் டத்தோ அப்துல் மாலிக்குடன் இணைந்து தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜே. லக்‌ஷ்மண் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹன்சிகாவுக்கு வில்லனாக ஶ்ரீகாந்த் நடித்திருக்கிறார். இவர்களுடன் கருணாகரன், சனம் ஷெட்டி, தம்பி ராமையா, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

காத்துவாக்குல ரெண்டு காதல்

இந்த படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது. இதே நாளில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயந்தாரா நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படமும் வெளியாகவிருப்பதனால் இந்த இரண்டு படங்களுக்கும் பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?