Silambarasan
ஐந்து சீசன்களைக் கடந்து விஜய் டி.வி-யில் வெற்றிநடை போடும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் மீது பல விமர்சங்களும் பாராட்டுகளும் வந்த வண்ணம் இருப்பது இயல்பு. எனினும் சுவாரஸ்யமான அம்சங்களுடனும் உளவியல் விளையாட்டுடனும் மக்களிடத்தில் பிரசித்தி பெற்றிருக்கிறது பிக்பாஸ் ரியாலிடி கேம் ஷோ.
இதுவரை இந்த நிகழ்ச்சியின் அதி சுவாரஸ்ய அம்சமாக இருந்தவர் இதன் தொகுப்பாளர் கமல்ஹாசன். திரைத்துறையின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் அவரின் அனுபவமும் கணிவும் பொறுமையும் நக்கல் நையாண்டிகளும் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அவரை ரசிகர்கள் மிஸ் செய்வதை நிச்சயம் தவிர்க்க முடியாது. ஆனாலும் யாராவது அவருக்குப் பதிலாக அந்த இடத்தில் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.
Simbu
கமல்ஹாசனை போன்ற கலகலப்பான லெஜண்டரி நடிகர் ஒருவர் தான் அவர் இடத்தை நிரப்பப்போவது. இந்த நிகழ்ச்சியை நடிகர் சிலம்பரசன் டி.ஆர் இனி தொகுத்து வழங்க போகிறார். இந்த செய்தி பிக்பாஸ் ரசிகர்களையும், சிலம்பரசன் ரசிகர்களையும் ஒரு சேர களிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.