பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தற்கொலை அல்ல கொலை எனக் கூறியுள்ளார், பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவமனை ஊழியர்களில் ஒருவரான ரூப்குமார் ஷா.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் பீகே, எம் எஸ் தோனி, கேதர்நாத், சிச்சோரே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2020 ஜூன் 14 ஆம் தேதியன்று, மும்பையின் பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் சுஷாந்த சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியது
சுஷாந்த் தனது வேலையில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் சில தனிப்பட்ட காரணங்களால், மனவுளைச்சலால் பாதிக்கப்பட்டு வந்ததாகவும், துக்கம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.
மற்றொரு புறம், அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள், அவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறினர். சுஷாந்த்தின் காதலி உட்பட, பல முன்னணி இந்தி நடிகர் நடிகைகள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளதாகக் கூறி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
சுஷாந்த்தின் அப்போதைய காதலி ரியா சக்கரவர்த்தி நார்க்காட்டிக்ஸ் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதற்கிடையில், சுஷாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என பிரேத பரிசோதனை முடிவுகள் தெரிவித்தன. சுஷாந்த்தின் சகோதரியோ, அவரது மரணம் தற்கொலையாக இருக்க முடியாது என தொடர்ந்து கூறி வந்தார். சுஷாந்த் இறந்து இரண்டரை வருடங்கள் கடந்தும் இன்னும் அவரது மரணம் சர்ச்சையாகவே இருக்கிறது.
தற்போது சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டு இறக்கவில்லை, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறியுள்ளார் கூப்பர் மருத்துவமனையின் ஊழியரான ரூப்குமார் ஷா. பிரேத பரிசோதனையின் போது இவரும் உடன் இருந்துள்ளார்
ரூப்குமார் ஷா கூறியதாவது:
"சுஷாந்த் இறந்த அன்று எங்கள் மருத்துவமனைக்கு 5 உடல்கள் பிரேத பரிசோனைக்காக வந்தன. அதில் ஒன்று விஐபியின் உடல். அது சுஷாந்த்தின் உடல் என்பதை அறிந்துக்கொண்டோம்.
பிரேத பரிசோதனை மேற்கொள்ள நாங்கள் சென்றோம். அப்போது அவரது உடலில் சில காயங்கள் (marks) இருந்தன. கழுத்துக்கு அருகிலும் இரண்டு மூன்று மார்க் இருந்ததை நான் கவனித்தேன்.
பிரேத பரிசோதனை பதிவு செய்யப்பட வேண்டும், ஆனால் உயர் அதிகாரிகள் உடலின் படங்களை மட்டுமே எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். எனவே, அவர்களின் உத்தரவின்படி நாங்கள் அதைச் செய்தோம்" என்று ஷா தொலைக்காட்சி 9 க்கு சொன்னதாக Timesnownews.com மேற்கோள் காட்டுகிறது
மேலும் அவர், சுஷாந்த்தின் உடலை பார்த்தவுடன் இது கொலை என தனக்கு சந்தேகம் இருப்பதாகவும், சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் எனக் கூறியதாகவும் ஷா தெரிவித்தார்.
"ஆனால் என் மேலதிகாரிகள், புகைப்படங்கள் மட்டுமே எடுத்துவிட்டு உடலை காவல் துறையினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர். அதையே நாங்கள் செய்யவேண்டியதாக இருந்தது.
அதன் பிறகு நாங்கள் அன்று இரவு தான் பிரேத பரிசோதனையை மேற்கொண்டோம்" என்றார்
கூப்பர் மருத்துவமனை ஊழியர் ரூப்குமார் ஷா வெளியிட்டுள்ள இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust