Shruti : “நீ என்னோடு தான் இருக்க” கணவர் இறப்பிற்கு பிறகு ஸ்ருதி வெளியிட்ட உருக்கமான பதிவு Twitter
சினிமா

Shruti : “நீ என்னோட தான் இருக்க” கணவர் இறப்பிற்கு பிறகு ஸ்ருதி வெளியிட்ட உருக்கமான பதிவு

ஃபிட்னஸில் ஆர்வம் கொண்ட அரவிந்த் சேகர் இவ்வளவு இளம் வயதில் மாரடைப்பால் மரணமடைந்தது நடிகர், நடிகைகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் ’மிஸ்டர் தமிழ்நாடு 2022’ பட்டம் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Priyadharshini R

நாதஸ்வரம் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. இவரது கணவர் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தையடுத்து உருக்கமான பதிவு ஒன்றை நடிகை வெளியிட்டிருக்கிறார்.

சண்முகப்பிரியாவுக்கும் அரவிந்த் சேகர் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. சோசியல் மீடியால் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி அவ்வபோது இருவரின் ரீல்ஸ் வீடியோக்கள் பதிவிட்டு வருவார்.

இந்நிலையில், நேற்று திடீரென மாரடைப்பால் அரவிந்த் சேகர் மரணமடைந்துள்ளார்.

ஃபிட்னஸில் ஆர்வம் கொண்ட அரவிந்த் சேகர் இவ்வளவு இளம் வயதில் மாரடைப்பால் மரணமடைந்தது நடிகர், நடிகைகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் ’மிஸ்டர் தமிழ்நாடு 2022’ பட்டம் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஸ்ருதியின் கணவர் திடீரென்று இறந்து போன பிறகு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில்," பிரிந்தது உடல் மட்டும் தான். உங்கள் உயிர் என்னை சூழ்ந்து இப்போதும், என்றென்றும் பாதுகாக்கிறது. அன்பே, உங்கள் மீதான எனது காதல் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.

நாம் ஏற்கனவே ஒருவருக்கொருவர் நிறைய நினைவுகளை வைத்திருந்தோம். அதை நான் வாழ்நாள் முழுவதும் என்னுடன் வைத்திருப்பேன். உங்களை மிஸ் பண்ணுகிறேன். என் அருகில் நீங்கள் இருப்பதை என்னால் உணர முடிகிறது" என்று கூறி இருக்கிறார். அத்தோடு தன்னுடைய கணவரோடு மகிழ்ச்சியாக எடுத்த புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார்.

இந்த பதிவுக்கு அதிகமான ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் தொடர்ச்சியாக தங்களுடைய ஆறுதல்களையும், வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?