சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் ராஜா இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.
கமல்ஹாசன் மற்றும் விஜயை வைத்து படம் இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து தலைவர் 171 வது படத்தை இயக்க உள்ளார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
ஜெயிலர் படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர், அது அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு உதவியது. ரஜினியின் அடுத்த படமான வேட்டையன் படத்திலும் இதே பாணியை தொடர்கின்றனர்.
அதேபோல தற்போது தலைவர் 171 வது படத்திலும் இதே பாணியை கையாள உள்ளனர்.
பொதுவாக லோகேஷ் படங்களில் மற்ற மொழிகளிலிருந்து முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பது பொதுவானது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினி 171 வது படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திலும் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் வெளியான 'மாஸ்டர்' மற்றும் 'விக்ரம்' படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust