Thalapathy 67: விக்ரம் அமர் இருக்கிறாரா? துணிவை விட இருமடங்கு வசூலிக்கும் வாரிசு - Updates Twitter
சினிமா

Thalapathy 67: விக்ரம் அமர் இருக்கிறாரா? துணிவை விட இருமடங்கு வசூலிக்கும் வாரிசு - Updates

Antony Ajay R

வாரிசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக நடித்துவரும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

தளபதி 67 என குறிப்பிடப்படும் இந்த படம் கைதி, விக்ரம் வரிசையில் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸில் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருக்கிறது. இது குறித்து ஆம் அல்லது இல்லை என எந்த அதிகாரப்பூர்வமான தகவல்களும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் விக்ரம் படத்தில் அமர் கதாப்பாத்திரத்தில் நடித்த ஃபகத் ஃபாசில் தளபதி 67-ல் இணைவாரா என்ற கேள்வி அவரிடமே கேட்கப்பட்டது.

அவர் தயாரித்துள்ள தங்கம் என்ற மலையாளப்படத்தின் விழாவில் கலந்துகொண்டவர் "படம் அதே யூனிவர்ஸில் இடம் பெற்றிருந்தால் ஒருவேளை நடிக்கலாம்" என கூறினார்.

தளபதி 67 நடிகர்கள்

சஞ்சய் தத்

த்ரிஷா

பிரியா ஆனந்த்

கௌதம் வாசுதேவ் மேனன்

அர்ஜுன்

மிஷ்கின்

ஆகியோர் தளபதி 67ல் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.

பிக்பாஸ் ஜனனி

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி

நடிகை ரக்ஷித் ஷெட்டி

ஆகியோரிடம் படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்றுவருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இப்போது தளபதி 67 படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் கலந்துகொள்ளவில்லை. பிப்ரவரியில் காஷ்மீரில் நடைபெறும் படப்பிடிப்பில் விஜய், சஞ்சய் தத் ஆகியோர் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

தளபதி 67 திரைப்படம் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் லலித் குமாரால் தயாரிக்கப்படுகிறது. அனிரூத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

துணிவு - வாரிசு

வாரிசு மற்றும் துணிவு படங்கள் ஒன்றாக வெளியாகி 12 நாட்கள் கடந்திருக்கின்றன. இத்தனை நாட்களில் வாரிசு படத்தின் வசூல் ரூ.260.5 கோடி எனக் கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் அஜித்தின் துணிவு திரைப்படம் இதுவரை ரூ.180.81 கோடி வசூல் செய்துள்ளது.

12வது நாளில் மட்டும் வாரிசு திரைப்படம், 10.6 கோடியும் துணிவு 6.9 கோடியும் வசூல் செய்துள்ளது. இப்படியாக வாரிசு படத்தின் வசூலில் பாதியை மட்டுமே ஈட்டி வருகிறது துணிவு.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?