உலக அரங்கில் ஹாலிவுட் படங்களைத் தவிர பிரஞ்சு படங்கள் மற்றும் இரானிய படங்கள் உலக அளவில் ரசிகர்களை பெற்றுள்ளன.
சில மொழிகளில் மாஸ்டர் பிலிம் மேக்கர்கள் பிரம்மாண்டமான கதைகள் மூலம் பல மொழி மக்களை ஈர்க்கின்றனர். அப்படி சில இந்திய மொழி படங்களும் உலக சினிமா ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றிருகின்றன.
இதுவரை வெளியான ஒட்டு மொத்த இந்தியப்படங்களில் சிறந்த பத்து படங்களை தேர்வு செய்துள்ளது, FIPRESCI என்ற சர்வதேச விமர்சகர்கள் கூட்டமைப்பு.
FIPRESCI வெளியிட்டுள்ள பட்டியலில் 5 இந்தி படங்கள் 3 பெங்காலி படங்கள் மற்றும் தலா ஒரு மலையாளம் மற்றும் கன்னட படங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த பட்டியல் மறைமுக வாக்கெடுப்பு மூலம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதில் சத்யஜித் ரே இயக்கிய பதேர் பஞ்சாலி ( Pather Panchali ) படம் முதலிடத்தில் உள்ளது.
1. பதோர் பஞ்சாலி - 1955 (சத்யஜித் ரே - பெங்காலி)
2. மேகே டாக்கா தாரா (Meghe Dhaka Tara) - 1960 (ரித்விக் கட்டாக் - பெங்காலி)
3. பூவன் ஷாம் (Bhuvan Shome) - 1969 (ரினால் சென் - ஹிந்தி)
4. எலிப்பதாயம் - 1981 (அதூர் கோபாலகிருஷ்ணன் - மலையாளம்)
5. கடாஷரத்தா - 1977 (கிறிஸ் கசரவல்லி - கன்னடா)
6. கர்ம் - 1973 (எம்.எஸ்.சத்யு - இந்தி)
7. சாருலதா - 1964 (சத்யஜித் ரே - பெங்காலி)
8. அன்குர் - 1974 (ஷ்யாம் பெங்கால் - இந்தி)
9. ப்யாசா ( pyaasa ) - 1957 (குரு தத் - இந்தி)
10. ஷோலே - 1975 (ரமேஷ் சிப்பி - இந்தி)
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust