மன்சூர் அலி கான் அருவருக்கத்தக்க பேச்சு - கொந்தளித்த நடிகை த்ரிஷா, வலுக்கும் எதிர்ப்பு! twitter
சினிமா

மன்சூர் அலி கான் அருவருக்கத்தக்க பேச்சு - கொந்தளித்த நடிகை த்ரிஷா, வலுக்கும் எதிர்ப்பு!

என்னுடன் நடிக்கும் ஆசை அவருக்கு இருக்கட்டும், ஆனால் இவர் போன்ற ஒரு மனிதருடன் நடிக்காமல் இருப்பதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். என் வாழ்நாள் முழுவதிலும் அவருடன் நிச்சயமாக நடிக்கப்போவதில்லை. இவரை போன்றவர்கள் மனித இனத்துக்கே இழுக்கை வரவழைக்கின்றனர்" என்று தன் X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

Keerthanaa R

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலி கான் அவதூறாக பேசிய வீடியோவுக்கு பதிலளித்துள்ளார் நடிகை த்ரிஷா.

சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் மன்சூர் அலி கான் பேசியிருந்தார். லியோ படத்தில் நடிகை த்ரிஷாவும் நடிக்கவுள்ளதாக தனக்கு தெரிந்தவுடன், அவரை பாலியல் வன்புணர்வு செய்யும் காட்சி இருக்கும் என்று ஆசைப்பட்டதாக பேசினார்.

"ஆஹா, த்ரிஷாவா? நிச்சயமா பெட்ரூம் சீன் இருக்கும். குஷ்பு, ரோஜாவை எல்லாம் கட்டில்ல தூக்கிபோடுற மாறி இவங்களையும் பண்ணலாம்னு யோசிச்சேன்" என்றவர், பத்திரிகையாளரை பார்த்து, ஏன் பா 150 படத்துல நம்ம பண்ணாததா? என்றும் பேசினார்.

அவரது ஆபாசமான பேச்சு இணையத்தில் தீயாக பரவியது. அனைவரும் இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகை த்ரிஷா பதிலளித்திருந்தார்.

"மன்சூர் அலி கான் என்னை பற்றி அவதூறாக, அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ என் கவனத்துக்கு வந்தது. அவரது பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன், அவரது பேச்சு, ஆணாதிக்க மனநிலையிலும், அவமரியாதையாகவும், பெண்கள் மீது வெறுப்பை உமிழ்க்கும் விதத்திலும், குறிப்பாக பாலின பாகுபாட்டை பிரதிபலிக்கும் மோசமான எண்ணமாக பிரதிபலித்தது.

என்னுடன் நடிக்கும் ஆசை அவருக்கு இருக்கட்டும், ஆனால் இவர் போன்ற ஒரு மனிதருடன் நடிக்காமல் இருப்பதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். என் வாழ்நாள் முழுவதிலும் அவருடன் நிச்சயமாக நடிக்கப்போவதில்லை.

இவரை போன்றவர்கள் மனித இனத்துக்கே இழுக்கை வரவழைக்கின்றனர்" என்று தன் X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

நடிகைக்கு ரசிகர்கள், சக நடிகர்கள் என அனைவரும் ஆறுதல்களும் ஆதரவும் அளித்து வருகின்றனர். பாடகி சின்மயி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலி கானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

"நாங்கள் அனைவரும் ஒன்றாக பணியாற்றியவர்கள் என்பதால் திரு.மன்சூர் அலிகான் அவர்களின் அவதூறான கருத்துக்களைக் கேட்டு மனமுடைந்து, கோபமடைந்தேன். பெண்கள், சக கலைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை மதிப்பது எந்தத் துறையிலும் சமரசமற்றதாக இருக்க வேண்டும், இந்த நடத்தையை நான் முற்றிலும் கண்டிக்கிறேன்" என்று லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்திருந்தார்

மன்சூர் அலி கான் இதற்கு முன்னர் பாலியல் வன்புணர்வுக்கு குற்றம்சாட்டப்பட்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வெளியானவர் என்பது குறிப்பிடதக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?