TTF Vasan : திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறாரா பிரபல யூடியூபர்? உண்மை என்ன? Twitter
சினிமா

TTF Vasan : திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறாரா பிரபல யூடியூபர்? உண்மை என்ன?

Priyadharshini R

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் Twin throttlers என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.

தனது இருசக்கர வாகனத்தில் நீண்ட தூரம் பயணித்தும், சாகசங்கள் செய்தும் 2கே கிட்ஸ் மனதில் இடம் பிடித்தவர் டிடிஎப் வாசன்.

அதிவேகமாக பைக்குகளில் ட்ராவல் செய்து அதனை வீடியோக்களாக எடுத்து தனது யூடியூப்பில் பதிவிட்டு வருவார். இவருக்கு யூடியூப்பில் 20 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்களை கொண்டுள்ளார்.

TTF Vasan

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தன்னுடைய பிறந்தநாளை கோவை தனியார் விடுதியில் ஒன்றில் தனது ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் கொண்டாடினார்.

அவருக்கு கூடிய கூட்டத்தை பார்த்த பொதுமக்கள் மிரண்டு போயினர். இந்த சம்பவத்திற்கு பின்னர்தான் டிடிஎப் வாசன் மீது மீடியாவின் பார்வை பட்டது. இதையடுத்து, இணையத்தில் டிடிஎப் வாசன் மீது விமர்சனம் எழுந்தது.

அதன் பின்னர் அனுமதிக்கப்பட்ட அளவை விட சாலையில் அதிவேகமாக பைக்கை ஓட்டுதல், ஜிபி முத்துவை பைக்கில் உட்காரவைத்து 150 கிமீ வேகத்தில் சென்றது உள்ளிட்ட பல்வேறு புகார்களில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் கொடுத்த நேர்காணல்களும் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில் பிரபலமான டிடிஎப் வாசனுக்கு சினிமா வாய்ப்பு கதவைத் தட்டியது என தகவல் வெளியானது.

அந்த வகையில் டிடிஎப் வாசன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அவரது பிறந்தநாளான வருகிற ஜூன் மாதம் 29 ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து தகவல்கள் வெளியாகாத நிலையில், இதனை வாசனின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே, வாசனின் பட அறிவிப்பு தொடர்பாக மீம்ஸ்களும் வரத் தொடங்கியுள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?