உதயநிதியுடன் விஷ்ணுவிஷால்

 

Facebook

சினிமா

"உதய்ண்ணா தான் எனக்கு சப்போர்ட்" - மேடையில் எமோஷனலான விஷ்ணு விஷால்

Antony Ajay R

விஷ்ணு விஷால் நடிப்பில் வரும் 11-ம் தேதி வெளியாக இருக்கிறது எஃப்.ஐ,ஆர் திரைப்படம். இதில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ராட்சசன் படத்திற்குப் பிறகு இந்த படம் அவருக்கு வெற்றியைப் பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று வெளியான இதன் ட்ரெய்லர் 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.


விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட்ஸ் மூவீஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

விஷ்ணு விஷால்

அதில் பேசிய விஷ்னுவிஷால், “எனக்கு மிகவும் எமோஷனலான தருணம் இது. இந்த மேடை மிக முக்கியமான மேடை. என் அப்பா இல்லை என்றால் நான் இங்கு இருந்திருக்க மாட்டேன். அவர் எனக்காக நிறைய உழைத்திருக்கிறார். நான் அவரது இடத்திலிருந்தால் இது போல் செய்திருப்பேனா என்பது தெரியாது, அவருக்கு நன்றி. இயக்குநர் மனு இந்தக் கதை சொன்னபோதே எனக்குப் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் வரும் விஷயங்கள், நிஜத்திலும் நடைமுறையிலும் இருப்பதுதான். நான் வளர்ந்த விதம் வேறு என்பதை இந்தக் கதையைக் கேட்ட போதுதான் நான் உணர்ந்தேன். `அட இது உண்மையில் நடக்கிறதே, இதை நிச்சயம் திரையில் சொல்ல வேண்டும்’ எனத் தோன்றியது.

படத்தின் தயாரிப்பாளர், ஒரு கட்டத்தில் இந்தப் படத்தை தயாரிக்க முடியாத சூழ்நிலை உருவானது. அப்போது என்னிடம் வந்து `நீங்கள் காத்திருக்க வேண்டும்’ என உண்மையை சொன்னார் இயக்குநர் மனு. அவரது நேர்மை எனக்கு பிடித்திருந்தது. அதனால் அவருக்காகத் தான் இந்தப்படத்தை தயாரித்தேன்.

படக்குழு

இந்தப் படத்தை ப்ரெஸ் ஷோ வழியாக நிறைய பேர் பார்த்துவிட்டார்கள். நடிகர் தனுஷ் படம் பார்த்து விட்டு, ` ராட்சசன் படத்தைத் தாண்டி இந்தப்படத்தில் ஒரு நடிகராக மிரட்டி விட்டீர்கள்’ என்று பாராட்டினார், ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதற்காக அவருக்கு நன்றி. கொரோனா லாக் டவுன், நிறைய பெர்சனல் ஸ்பேஸ் தந்தது. அதை நல்ல முறையில் பயன்படுத்தி, எல்லோரும் உழைத்து அழகாக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். உதய் அண்ணா, செண்பக மூர்த்தி சாருக்கு என் வாழ்நாள் முழுதும் நன்றி சொன்னாலும் பத்தாது. அந்தவகையில் உதய் அண்ணாதான் என்னுடைய மிகப்பெரிய சப்போர்ட்.

இப்போது இந்தப் படத்திற்காக என்று சொல்லவில்லை. குள்ளநரி கூட்டம் படத்தையே அவர்கள் தான் ரிலீஸ் செய்து தந்தார்கள். எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்துள்ளார்கள், இந்தப் படத்தை ரிலீஸ் செய்வதற்கு நன்றி. ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி ராஜா அவர்களுக்கு நன்றி. தங்கதுரை சாருக்கு நன்றி, என்றும் எனக்கு உறுதுணையாக இருப்பவர். எப்போதும் போல் இந்தப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள்” என்றார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?