வனிதா விஜயகுமார் என்ற பெயரைக் கேட்டதுமே, அவர் செய்த சம்பவங்கள் தான் கண் முன் வந்து நிற்கும். மனதில் பட்டதைப் பட்டென பேசிவிடுவது, குடும்பமாக இருந்தாலும் சுயமரியாதை வேண்டும் எனக் கறாராக இருப்பது இப்படி வனிதாவிடம் நிறைய நல்ல குணங்கள் இருந்தாலும், அவரின் ஹை பிட்ச் குரல் அவரை சண்டைக்காரியாகச் சித்தரித்து விடுகிறது.
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி வனிதாவுக்கு புது அடையாளத்தைக் கொடுத்தது. பல லட்சம் பேர் பார்க்கும் ரியாலிட்டி நிகழ்ச்சி என்று பொய்யாக நடிக்காமல், வெளியே எப்படியே, அப்படியே பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் நடந்து கொண்டார் வனிதா. இதனால் அவர் மீதான பிம்பம் மாறியது. பிக் பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் ஆனதும் அடுத்ததாக குக் வித் கோமாளி முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றார். அதன் பின்னர் ரசிகர்களிடம் நன்மதிப்பைப் பெற்றார்.
குக் வித் கோமாளி பட்டம் வென்றதால் தமிழகத்தில் தனக்குக் கிடைத்த exposure-ஐ வைத்து யூ டியூப் சேனல் ஆரம்பித்தார் வனிதா. சமையல், பியூட்டி டிப்ஸ் என நல்ல ரேட்டிங்கில் வீடியோக்கள் ஹிட் அடித்தது. தற்போது அவருக்கு யூ டியூபில் 7 லட்சம் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர்.
யூடியூப் சேனலில் நல்ல வருமானம் வந்து கொண்டிருக்கும் போதே அதோடு விட்டுவிடாமல் ஆடையகம் ஒன்றை தொடங்கி தொழில் முனைவோர் ஆனார் வனிதா. இதனிடையே அனல் காற்று, அந்தகன், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லு இருந்தா போராடு, பிக்கப் டிராப் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் பிக்பாஸ் அல்ட்டிமேட்டில் பங்கேற்று, ரன்யா கிருஷ்ணன் கொடுத்த ஜட்ஜ்மெண்ட் பிடிக்காததால் வனிதா நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறினார். யூடியூப், சின்னத்திரை, வெள்ளித்திரை, ரியாலிட்டி நிகழ்ச்சி என பிஸியாக இயங்கும் வனிதா தற்போது மேக் அப் ஆர்ட்டிஸ்டாகவும், ஃபேஷன் டிசைனராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
வனிதா விஜயகுமார் ஸ்டூடியோஸ் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அறிமுக விழாவில், வனிதாவின் குட் புக்கில் இருக்கும் நண்பர்கள் சிலர் மட்டும் பங்குபெற்றுள்ளனர். உமா ரியாஸ், சினேகன், கனிகா சினேகன், தாடி பாலாஜி, காயத்ரி ரகுராம் ஆகியோர் பங்கு பெற்றனர். வனிதா ஒவ்வொரு முறையும் குடும்ப பிரச்சனைகளால் மீடியா முன்பு, போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்ற போது விமர்சித்த நாம், குடும்பத்தினர் ஆதரவு இல்லாமல் சுயமாக ஆர்வத்துடன் புது விஷயங்களை கற்று கொண்டு, பிசினஸ் வுமனாக அவதாரம் எடுத்திருக்கும் வனிதாவையும் பாராட்ட வேண்டும்.
வனிதாவின் இந்த வளர்ச்சியில், இன்றைய தலைமுறைக்கு கற்று கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன.
நெகட்டிவான விஷயங்களை எப்போதும் மண்டைக்குள் ஏற்றிக் கொள்ளக் கூடாது.
புது விஷயங்களை கற்றுக் கொள்ள வயது தடை இல்லை.
ஒரே துறையில் கடைசி வரை காலத்தை ஓட்டி விடலாம் என்று நம் வட்டத்தைச் சுருக்கிக் கொள்ளக் கூடாது. பேக்கிங் தொடங்கி டிரேடிங் வரை அனைத்துக்கும் ஆன்லைன் வகுப்புகள் வந்துவிட்டன. நமக்கு செட் ஆகும் படிப்பைத் தேர்வு செய்து வீக் எண்டில் படிக்கலாம்.
எந்த சூழலிலும் நம் சுயமரியாதையை இழந்து விடக்கூடாது.
பிறருக்காக, மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதற்காக நம் சுயத்தைத் தொலைத்து விடக் கூடாது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu