விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க விரும்புவதாக நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் என எல்லா துறைகளிலும் தடைகளை கடந்து சாதித்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பது வழக்கம்.
அவர்கள் குறித்த தகவல்களை, அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் முயற்சி என்று கூட சொல்லலாம். நிறைய கிரிக்கெட் வீரர்களின் பையோபிக் எடுக்கப்பட்டிருக்கிறது. தோனி, கபில்தேவ், மிதாலி ராஜ் என பட்டியல் நீளும்.
அந்த வகையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலியின் பையோபிக் எடுக்கப்பட்டால், அதில் கோலியாக தான் நடிக்க விரும்புவதாக பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
தெலுங்கு படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த விஜய் தேவரகொண்டாவிற்கு அர்ஜுன் ரெட்டி படம் பெரியளவில் ஹிட் கொடுத்தது. அதன் பிறகு பட வாய்ப்புகளும் குவிந்தன. நோட்டா, டியர் காம்ராட், டாக்சிவாலா, கீதா கோவிந்தம் ஆகிய படங்களில் நடித்தார் விஜய் தேவரகொண்டா.
சமீபத்தில் இவர் நடித்த லைகர் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ஒரு பாக்சர் ஆக நடித்திருந்தார் விஜய். கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று நடந்த இந்தியா பாகிஸ்தான் ஆசியக் கோப்பை போட்டிக்கு விஜய் தேவரகொண்டா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust