Vijay or Ajith : Who’s the bigger star? Trisha opinions here Twitter
சினிமா

தல vs தளபதி : ” இதுக்கு இல்லையா சார் END” - த்ரிஷா என்ன சொன்னார் தெரியுமா?

விஜய் எப்போதும் அமைதியாக இருப்பார். அவர் வாழ்க்கையை கையாளும் விதம் எனக்குப் பிடிக்கும். எனக்கு அஜித்தின் குணம் பிடிக்கும். அவர் ஒரு ஜென்டில்மேன் என்று அவர் மேலும் கூறினார்.

Priyadharshini R

இந்த தல vs தளபதி போர் பல ஆண்டுகளாக நடந்துக் கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு ரசிகர்களும் தங்களின் தனிப்பட்ட கருத்தை பொதுவெளியில் முன்வைத்து இணையம் வழியே மோதிக்கொள்கின்றனர். இன்றும் ட்விட்டர் பக்கம் போனால் ஒரு கூட்டம் யார் பெரிய நட்சத்திரம் விஜய்யா அஜித்தா? என பல ஹேஷ்டாக்குகளை உருவாக்கி மோதிக்கொள்வார்கள்.

சமீபத்தில் கூட தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய் பெரிய ஸ்டார் என்று வாரிசு படத் தயாரிப்பாளர் தில் ராஜு பேசியிருந்தது ரசிகர்களை கோபத்துக்கு ஆளாக்கியது.

இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பின் விஜய்யின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் பொங்கலுக்கு ஒரே சமயத்தில் ரிலீஸாகிறது.

இது குறித்து ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப்பிரபலங்களும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில் இந்த தல vs தளபதி சர்ச்சை குறித்து நடிகை என்ன நினைக்கிறீர்கள் என்று த்ரிஷாவிடம் கேட்கப்பட்டது.

த்ரிஷா கூறியதாவது:

நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே விஜய் மற்றும் அஜித் மூத்த நடிகர்கள். ஆனால் நான் அப்படி உணரவில்லை. ஒரு சினிமா பிரியராக பார்வையாளராக அவர்களின் படங்களை பார்க்கிறோம். ஒவ்வொருவருக்கும் அவரவர் ரசிகர் மன்றங்கள் உள்ளன.

ஆனால், இந்த தல vs தளபதி சண்டையை உருவாக்கியது நாம் தான். யார் நம்பர் 1 அல்லது நம்பர் 2 என்று எப்படி சொல்வது? இருவரும் மிக பெரிய ஸ்டார்கள் தான் என்றார்.

விஜய் எப்போதும் அமைதியாக இருப்பார். அவர் வாழ்க்கையை கையாளும் விதம் எனக்குப் பிடிக்கும். எனக்கு அஜித்தின் குணம் பிடிக்கும். அவர் ஒரு ஜென்டில்மேன் என்று அவர் மேலும் கூறினார்.

த்ரிஷாவுக்கு விஜய், அஜித்தை பல வருடங்களாக தெரியும். கில்லி போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் விஜய்க்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார். ​​அஜித்துடன் மங்காத்தா மற்றும் என்னை அறிந்தால் போன்ற வெற்றி திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். ​​

தளபதி 67 இல் விஜய்யுடன் த்ரிஷா நடிக்க போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இது உண்மையாக இருந்தால், 14 வருட இடைவெளிக்குப் பிறகு விஜய் மற்றும் த்ரிஷா மீண்டும் இணையும் படமாக அது இருக்கும். 2008 ஆம் ஆண்டு வெளிவந்த குருவி படம்தான் இவர்கள் கடைசியாக இணைந்து நடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?