விஜயகாந்த் : டூப் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிய கேப்டன் - ஏவிஎம் வெளியிட்ட வீடியோ Twitter
சினிமா

விஜயகாந்த் : டூப் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிய கேப்டன் - AVM வெளியிட்ட வீடியோவின் பின்னணி?

Priyadharshini R

90 காலக் கட்டத்தில் மக்கள் மத்தியில் ஆக்‌ஷன் ஹீரோவாக அறியப்பட்டவர் விஜயகாந்த்.

ரமணா, கேப்டன் பிரபாகரன், சத்ரியன், வல்லரசு, வாஞ்சிநாதன், என பல ஆக்‌ஷன் படங்களில் நடித்துள்ளார். அவரின் பஞ்ச் டயலாக்குகள் இன்றும் பல மீம் டெம்டேட்களில் வலம் வருகிறது.

அந்த வரிசையில் 1994ஆம் ஆண்டு இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் வெளியான சேதுபதி ஐ.பி.எஸ் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு ஏவிஎம் புரோடக்‌ஷன்ஸ் தான் தயாரிப்பு நிறுவனம்.

அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வெடிகுண்டை விஜயகாந்த் செயலிழக்க செய்துபோல அமைக்கப்பட்டிருக்கும்.

அதாவது விஜயகாந்த் மணிக்கூண்டில் ஏறி அதில் இருக்கும் வெடிகுண்டை செயலிழக்க செய்வார்.

இது குறித்து ’ஏவிஎம்’ சரவணனின் பேத்தி அருணா குகன் தனது x பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்திருந்தார்.

“படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கயிறு அல்லது தொழில்நுட்பம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை, ஸ்டண்ட் டபுள் ஆக்‌ஷன் இல்லை. இது போன்ற காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பது விஜயகாந்த் சாரின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் என தன் தத்தா பேசியிருப்பதாக கூறினார். மணிக்கூண்டு கோபுரத்தில் இந்த காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது” எனவும் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து சேதுபதி ஐ.பி.எஸ் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இணையத்தில் வைரலானது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?