Vijaykanth : த்ரிஷா முதல் கமல்ஹாசன் வரை - கேப்டன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள் Twitter
சினிமா

Vijaykanth : த்ரிஷா முதல் கமல்ஹாசன் வரை - கேப்டன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்

Priyadharshini R

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

சென்னை கோயம்போட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 4.30 மணிக்கு விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விஜயகாந்த் மறைவிற்கு நடிகை த்ரிஷா இரங்கல்!

கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தேமுதிக அலுவலகம் வந்தார் நடிகர் கவுண்டமணி.

விஜயகாந்த் மறைவிற்கு கவிஞர், ”எரிமலை எப்படிப் பொறுக்கும் என்ற என் பாடலுக்கு உயிர்கொடுத்த கதாநாயகன் உயிரிழந்து போனார் திரையில் நல்லவர் ; அரசியலில் வல்லவர் சினிமாவிலும் அரசியலிலும் ‘டூப்’ அறியாதவர் கலைவாழ்வு பொதுவாழ்வு கொடை மூன்றிலும் பாசாங்கு இல்லாதவர் கலைஞர் ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் அரசியல்செய்த காலத்திலேயே அரசியலில் குதித்தவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற உயரம் தொட்டவர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவரை நில்லென்று சொல்லி நிறுத்திவிட்டது  காலம் வருந்துகிறேன்” என்று வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.


“எனது முதல் படமான 'கள்ளழகர்' லெஜெண்ட் விஜயகாந்தின் பரிசு எனவும் எனது திரைப்பயணத்தில் அவருக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன்” என்றும் நடிகர் சோனுசூட் விஜய்காந்த் மறைவிற்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

"எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த்-ன் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கின்றது விஜயகாந்த்-ன் மறைவு எங்கள் தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும்,  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

”எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது” என்று கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“அண்ணன் விஜயகாந்த் மறைவு அதிர்ச்சியாக உள்ளது..” - நடிகர் சரவணன் உருக்கம்! கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ்: அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை, இனி எப்போது காண்போம் கேப்டன், உங்கள் நினைவுக்கும் ,உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி.

ஆர்ஜே பாலாஜி: ‘விஜயகாந்த் ரொம்ப நல்ல மனுஷன்’. இதைச் சொல்ல நீங்கள் திரையுலகில் இருக்க வேண்டியதில்லை. தமிழ்நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் சினிமா துறையின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், இதை நாங்கள் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். நீங்கள் எப்போதும் அன்பானவர், நல்லவர், தைரியமான மனிதர், தலைவர், லெஜெண்ட் என்று நினைவுகூரப்படுவீர்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?