Vijay's 'Leo' will be part of LCU hints THIS latest picture Twitter
சினிமா

Leo : LCU-க்குள் வருகிறதா விஜய் படம் - Hint கொடுத்த இயக்குநர்; வைரலாகும் மீம்ஸ்

Priyadharshini R

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படமான 'லியோ' படத்திற்காக விஜய்யுடன் கைகோர்த்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கௌதமேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான், சாண்டி, மேத்யூ தாமஸ் என நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது.

இந்த படம் லோகேஷ் கனகராஜின் சினிமாடிக் யுனிவர்ஸின் (LCU) ஒரு பகுதியாக இருக்குமா அல்லது இல்லை என்பதை இயக்குனர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இருப்பினும், சமூக ஊடகங்களில் சுற்றும் ஒரு சமீபத்திய படம் விஜய்யின் 'லியோ' LCU இன் ஒரு பகுதியாக இருக்கும் என்பதைக் குறிக்கிறது.

லோகேஷ் கனகராஜுடன் இணைந்து 'லியோ' படத்தின் வசனங்களை எழுதும் ரத்ன குமார், காஷ்மீரில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சமீபத்திய படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில் ரத்னக்குமார் ஒரு பக்க கண்ணாடியை கையில் வைத்திருக்கிறார், கேப்ஷனாக Never say die என்றும் #லியோ #காஷ்மீர் #ஷூட்டிங் டைரீஸ் என்றும் பதிவிட்டிருந்தார்.

இதற்கு முன்னர் கழுகு குறியீடுக்கு முன் அமர்ந்திருக்கும் படத்தை பகிர்ந்திருக்கிறார். இதனையடுத்து ஈகிள் விக்ரம் பட கமல்ஹாசனை குறிக்கும் என்பதால் அவர் இந்தப் படத்தில் இருப்பதாக ரசிகர்கள் நம்பத் தொடங்கினர்.

இதனை தொடர்ந்து சன் கிளாஸின் ஒரு பகுதியை தனது கையில் வைத்திருக்கும் மற்றொரு படத்தை ரத்னக்குமார் பகிர்ந்தார். அது விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி அணிந்திருப்பது போன்று உள்ளதாகவும் விக்ரம் பட சந்தானம் லியோவில் இருப்பதாவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் லியோ பட தகவல்களை ஒவ்வொன்றாக ரத்னக்குமார் வெளியிட்டு வருவதாகவும் அதனால் லோகேஷ் வைத்து mind voice Be like என்று கற்பனையாக சித்தரித்து மீம்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த 2 நாட்களாக இணையத்தை இந்த தகவல்கள் ஆக்கரமித்து வருகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?