Vikram Kamal Hassan

 

Twitter

சினிமா

Kamal Haasan 'விக்ரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு ; வீடியோ வெளியிட்ட லோகேஷ்

Antony Ajay R

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடிக்கும் திரைப்படம் விக்ரம். விஸ்வரூபம் திரைப்படத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து இந்த திரைப்படம் வருவதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஏப்ரலில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் பல மேடைகளில் தன்னை கமலின் தீவிர ரசிகர் என்பார். கமல் தனது இன்ஸ்பிரேஷன் என்றும் கூறியுள்ளார். அவருக்கு 4வது படமே கமல்ஹாசனுடன் இணைவதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ள லோகேஷ் விருவிருப்பான திரைமொழியுடன் சிறப்பாக படத்தை இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதை ஆக்‌ஷன் கருவைக் கொண்டிருப்பதனால் துப்பாக்கி சத்தம் தெரிக்கவிடுவதை முதலில் வந்த க்ளிம்ப்ஸ்-லேயே பார்த்தோம். ஷூட்டிங்கில் அதேப்போல துப்பாக்கியுடன் ஃபகத் செய்த மாஸ் சம்பவத்தை லோகேஷ் கனகராஜ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் ஃபகத் ஒரு துப்பாக்கியால் சுடுகிறார். பின்னர் சுற்றியிருக்கும் படக்குழு ஆர்பரிக்கிறது. 110 days of shoot it's a wrap என பகிர்ந்துள்ளார் லோகேஷ்.

இதன் மூலம் விக்ரம் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் லோகேஷ்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?