Kamal NewsSense
சினிமா

விக்ரம் : "கமலை யாராலும் மிரட்ட முடியாது" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

NewsSense Editorial Team

"கமல் சாரை மிரட்டி இப்படத்தை வாங்கிவிட்டீர்களா என கேட்டார்கள், யார் மிரட்டினாலும் அவர் பயப்படக்கூடியவர் அல்ல அவரை யாரும் மிரட்டவே முடியாது," என உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார்.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிற படம் 'விக்ரம்'. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 6 மணிக்கு தொடங்கியது. விழா தொடங்கும் முன்பு ரஜினிகாந்த் கமல் பற்றிப் பேசிய காணொலி ஒளிபரப்பப்பட்டது. இளையராஜா அனுப்பிய வாழ்த்துச் செய்தி சோதித்துப் பார்க்கப்பட்டது.

கமல்ஹாசன், அக்ஷரா ஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், இயக்குநர் ரவிக்குமார், நரேன், காளிதாஸ் ஜெயராம் எனப் பலர் கலந்துகொண்டனர். சர்ப்ரைஸ் விசிட்டாக சிம்பு களமிறங்கினார்.

இந்நிகழ்வில் பேசிய உதயநிதி ஸ்டாலின் இவ்வாறாக பேசி உள்ளார்.

மேலும் உதயநிதி ஸ்டாலின், "அரசியல் கட்சி தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வரீங்க கமல் சார். ஆனா ஒரு ரெக்வஸ்ட், வருசத்துக்கு ஒரு படமாச்சு பண்ணுங்க சார் . ரெட் ஜெயன்ட்ல பல சின்ன படங்கள் தயாரிக்கும் போது பெரிய பலமா கமல் சார் இருப்பாரு." என்றார்.

அடுத்து பேசிய விஜய் சேதுபதி, "கமல் 60 பங்ஷன் அப்போ, கமல் சார் முன்னாடி அவர்கூட நடிக்கணும் கேட்டேன். இப்போ அது நடந்துருச்சு, அடுத்து ஒரு வேண்டுகோள் சார் ... உங்க டைரக்சன்ல நடிக்கணும்னு ஆசை சார்.13 வயசுல கமல் சாரோட நம்மவர் படத்துல நடிக்கிறதுக்கு போய் ரிஜெக்ட் ஆனேன். இப்போ சேர்ந்து நடிச்சது நான் செஞ்ச புண்ணியமா, என் பாட்டன் செஞ்ச புண்ணியமான்னு தெரில" என்றார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?