நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. இதனை இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இவர், மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவரது கைதி திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்போது தமிழ் சினிமாவில் அதிக மார்கெட் இருக்கும் இயக்குநர்களில் முக்கியமானவர் லோகேஷ்.
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்கள் ஸ்டார் வேல்யூ அடிப்படையிலேயே வெற்றி பெருகின்றன. அந்த வகையில் விக்ரம் படத்தின் வெற்றி அதன் நடிகர் பட்டாளத்திலிருந்தே ஏறத்தாழ உறுதியாகியிருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்ரம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஆக்ஷன் படமான விக்ரம் 100% லோகேஷ் கனகராஜ் படமாக உருவாகியுள்ளதாக சமீபத்திய நேர்காணலில் தெரிவித்திருந்தார் இயக்குநர் லோகேஷ்.
இந்த படத்தைக் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ரெட் ஜெயன்ட் மூவீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் விநியோக உரிமையைப் பெற்றுள்ளன. இந்த படம் வெளியீட்டுக்கு முன்பே பல கோடிகள் சம்பாதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா தனது ட்விட்டரில் விக்ரம் படம் பல மொழிகளில் ஓடிடி உரிமம் மற்றும் சேட்டலைட் உரிமம் வாயிலாக 200 கோடிக்கு மேல் சம்பாதித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
இது வரை கமல்ஹாசன் பணியாற்றிய படங்களிலேயே ரிலீஸுக்கு முன் இந்த அளவு வர்த்தகமானது எதுவுமில்லை எனக் கூறப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust