விக்ரம் கமல்ஹாசன் Twitter
சினிமா

விக்ரம் முதல் கேஜிஎஃப் வரை - 2022ல் ரூ.100 கோடி வசூல் செய்த தென்னிந்திய படங்கள்

Priyadharshini R

ஆண்டுந்தோறும் வெளியாகும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது

முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு வெளியாகி மெகா ஹிட் அடித்தது மட்டுமில்லாமல், பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த 6 தென்னிந்திய படங்கள் குறித்து காணலாம்.

1. RRR

ராஜமௌலியின் இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ஆர்ஆர்ஆர்.

இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ 1200 கோடிக்கு மேல் வசூலித்து, உலகம் முழுவதும் உள்ள பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்துள்ளது. இந்த ஆண்டு பிரம்மாண்டமாக வெளியான படங்களில் ஆர்ஆர்ஆர் திரைப்படமும் ஒன்று.

2. Vikram

கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் விக்ரம்.

தனி மனிதனின் திறமைக்கும் வயதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் இந்த படம் நிரூபித்தது.

கமல்ஹாசனின் கில்லர் ஆக்‌ஷன் அனைவரையும் தியேட்டர் பக்கம் இழுத்தது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ 432.50 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

3. KGF 2

ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கேஜிஎஃப் திரைப்படத்தில் யாஷ் நடித்திருந்தார்.

இந்த படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இப்படத்தில் ரவீனா டாண்டன் மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

4. Beast

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'பீஸ்ட்'. இயக்குநர் செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் ரூ 260 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

5. Sarkaru Vaari Paata

சர்க்கார் வாரி பாட்டா படத்தில் மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 2022 இன் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.200 கோடியுடன் அதிக வசூல் செய்த தெலுங்கு திரைப்படங்களில் ஒன்று என்ற பெருமையை பெற்றது.

6.Bheemla Nayak

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த படம் அய்யப்பனும் கோஷியும். இதன் தெலுங்கு ரீமேக் தான் பீம்லா நாயக்.

பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதி ஆகியோர் நடிப்பில் இந்த வருடம் வெளியாகி ஹிட்டடித்தது. இப்படம் ரூ 193 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?