அட்டகத்தி படத்தில் காதல் தோல்வியடைந்தும் சோகம் வராத தினேஷ் ஒரு தலை ராகம் படத்தைப் பார்த்து கண்ணீருடன் திரையரங்கை விட்டு வெளியே வருவார்.
இப்படி நீங்கள் ஏற்கெனவே சோகத்தில் இருக்கும் போது ஒரு படத்தை பார்த்து சிரிக்க முடிந்தால் அது தான் Feel Good Movie. இந்த Feel Good பின்னிருக்கும் அறிவியலை துலக்கியிருக்கிறது கடந்த ஆண்டில் வெளியன ஆய்வு ஒன்று.
ஒரு ஃபீல் குட் படத்துக்கு தேவையான காரணிகள், நகைச்சுவை மற்றும் மகிழ்ச்சியான முடிவு. இவற்றுடன் சில பொருட்கள் என்று Max Planck Society ஆராய்ச்சிக்குழு கூறியிருக்கின்றனர்.
பொதுவாக சமூகத்துடன் ஒட்டாத ஒருவர் அன்பைத் தெடி அலைந்து மோசமான சூழல்களில் போராடி தனது இடத்தைப் பிடிக்கும் கதை ஒரு Feel Good வடிவமாகும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த அம்சங்களை விசித்திரமான கதையுடன் இணைத்து பலதரப்பட்ட உணர்வுகளுடன் மெறுகேற்றி மனதுக்கு லேசானதாக்கும் போது ஒரு சிறந்த படம் உருவாவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பேய்ப்படங்கள் இரத்தகொதிப்பை அதிகரிக்கும் என்பதை நாம் அறிவோம். அதேப் போல, நகைச்சுவைகள் மன அழுத்தத்தையும் இரத்த அழுத்தத்தையும் குறைப்பதாகக் காணப்படுகின்றன.
Max Planck Society நடத்திய ஃபீல் குட் படத்துக்கான ஆய்வில் ஜெர்மனி, ஆஸ்திரியா, பெல்ஜியம் மற்றும் சுவிச்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 450 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு பல திரைப்படங்கள் திரையிடப்பட்டு அனுபவங்கள் பெறப்பட்டு ஆய்வு முடிவுகள் உருவாக்கப்பட்டன.
ரொமான்டிக் காமெடி திரைப்படங்கள் ஃபீல் குட் படங்களின் வரிசையில் முதலிடத்தைப் பிடிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், காதல், நகைச்சுவை, நாடகம் இத்துடன் ஆழமான எமோஷனும் சரியான அளவில் இருக்கும் திரைப்படங்கள் பார்வையாளர்கள் மனதுக்கு நெருக்கமாகின்றன என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
உணர்வுப் பூர்வமான கதை, சிறப்பான காட்சிகளுடன் முக்கியமாக தொழில்நுட்ப ரீதியிலும் சிறந்த படமாக இருப்பது தான் ஃபீல் படமாக உருவாக முடியும் என்று ஆய்வு கூறியுள்ளது.
இவற்றைக்கொண்டு கவனித்தால்,
காதலுக்கு மரியாதை
ரிதம்
அன்பே சிவம்
மௌன ராகம்
காக்கா முட்டை என தமிழில் பல ஃபீல் குட் படங்கள் இருப்பதை பார்க்கலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust