Kriti Sanon, Vijay, Disha Patani
Kriti Sanon, Vijay, Disha Patani Twitter
சினிமா

Thalapathy 66 Update : தளபதிக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை? பூஜை போட தயாரான வம்சி

Antony Ajay R

விஜய் 66 படத்தை இயக்குகிறார் தெலுங்கு இயக்குநர் வம்சி. இவர் கார்த்தி மற்றும் நாகர்ஜுனா நடித்த தோழா படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இயக்குநர் சங்கர் - ராம்சரண் இயக்கத்தில் உருவாகும் படத்தைத் தயாரிக்கும் தில்ராஜு இந்த படத்தையும் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இதுவரை விஜய்யுடன் ஜோடி சேராத ஹீரோயினாக தேடி வருகின்றர் படக்குழுவினர். இந்த படம் பான் இந்தியா படமாக வெற்றி பெற வேண்டும் என படக்குழு விரும்புவதால் நேஷனல் க்ரஷ் என அழைக்கப்படும் ராஷ்மிகா பெயர் தான் முதலில் க்ளிக் ஆனாது. ஆனால் புஷ்பா - 2 உள்ளிட்ட படங்களில் ராஷ்மிகா பிஸியாக இருப்பதால் அவருக்கு வாய்ப்பில்லை என கூறிவிட்டனர்.

அத்துடன் இந்தியில் வெற்றி பெற பாலிவுட் கதாநாயகிகள் வேண்டும் எனவும் யோசித்து வருகின்றனர்.

வம்சி, தில்ராஜு, விஜய்

பாலிவுட்டில் ரசிகர்கள் செல்வாக்கு அதிகம் இருக்கும் ஹீரோயின்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆராயப்பட்டிருக்கிறது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு இரட்டை வேடம் இருப்பதால் கீர்த்தி சனோன், திஷா பதானி ஆகிய இரண்டு பேரையும் கதாநாயகிகளாக தேர்வு செய்திருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.

விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாவிருக்கும் நிலையில் அடுத்த படத்துக்கான படப்பிடிப்பு ஏப்ரல் 6ம் தேதியே தொடங்குகிறது. இதனால் விஜய் ரசிகர்களும் செம குஷியில் இருக்கின்றனர்.

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?