கவினுக்கு திருமணம்; மணப்பெண் லாஸ்லியாவின் Stylist ஆ? யார் இந்த மோனிக்கா டேவிட்? Twitter
சினிமா

கவினுக்கு திருமணம்; மணப்பெண் லாஸ்லியாவின் Stylist ஆ? யார் இந்த மோனிக்கா டேவிட்?

Priyadharshini R

நடிகர் கவின் திருமணம் குறித்த தகவலைத் தொடர்ந்து, தற்போது கவின் காதலி என்று கூறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் கவின் இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் ஸ்கிரீன் ஷாட்களும் இணையதளத்தில் கசிந்துள்ளன.

நடிகர் கவின், கடந்த 2011-ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் ‘சிவா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு சரவணன் மீனாட்சி, தாயுமானவன் போன்ற தொடர்களில் கவின் நடித்தார்

2013 இல், சரவணன் மீனாட்சி 2 சீரியலில் கவின் முக்கிய வேடத்தில் நடித்தார். இந்தத் தொடர் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு வெளியான ’சத்ரியன்’ படத்தில் துணை வேடத்தில் நடித்தார்.

2019ஆம் ஆண்டு ’நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அதே ஆண்டில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் கவின் போட்டியாளராக கலந்து கொண்டார்.

கவின் சமீபத்தில் கணேஷ் கே பாபு இயக்கிய ’டாடா’ படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடிகர்கள் பாக்யராஜ், அபர்ணா தாஸ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, OTT-யிலும் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படி தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வரும் கவினின் திருமணம் குறித்த தகவல் 3 நாட்களாக உலா வருகிறது. அதன்படி, ஆகஸ்ட் 20ஆம் தேதி கவின் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், இருவரது பெற்றோரின் ஆசியுடன் கவின் தனது நீண்ட நாள் காதலியான மோனிக்கா டேவிட்டை திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும், கூகுளிலும் மோனிக்கா டேவிட் யார் என்று தேட ஆரம்பித்துவிட்டனர்.

கவினின் காதலி என்று கூறப்படும் இந்த பெண், சமீபத்தில் கவினுக்கு வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவர் கவின் உடனான வீடியோ அழைப்பின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார்

அதில் கேப்ஷனாக “நான் சந்தித்ததில் மிகவும் வேடிக்கையான நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! PO POI THOLA” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த புகைப்படத்தை எடுத்து இணையவாசிகள் கவினுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததுடன் அந்த ஸ்கிரீன் ஷாட்டை வைரல் செய்து வருகின்றனர்.

கவினின் காதலி என்று கூறப்படும் மோனிக்கா டேவிட் தொடர்பான ரீல்ஸ் வீடியோவும் அவர் பணிபுரியும் இடத்தின் ஐடி கார்டின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த ஐடியில் அவர் அமெரிக்கன் இண்டெர்நேஷனல் ஸ்கூல் ஸ்டாஃப் என்றுள்ளது.

இன்னும் சில மீம் பேஜ்களில் அவர் கவினின் முன்னாள் கதலியான லாஸ்லியாவின் ஸ்டெய்லிட் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக கவின் எந்தவிதமாக தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?