Smith Couple Oscars
சினிமா

“வன்முறையை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது” - கிரிஸ் ராக்கிடம் மன்னிப்பு கேட்ட வில் ஸ்மித்

Antony Ajay R

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்சில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் வில்ஸ்மித் நகைசுவையாளர் கிரிஸ் ராக்கை முகத்தில் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற வில்ஸ்மித் மேடையில் தனது தவற்றுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். நகைச்சுவை நடிகர் கிரிஸ் ராக் அதற்காக எந்தவித எதிர்வினையும் ஆற்றாமலிருந்தார்.

வில் ஸ்மித் அறிக்கை

தற்போது பொது வெளியில் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன் கிரிஸ் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் வில் ஸ்மித். அந்த அறிக்கையில், "எந்த வடிவில் வன்முறை இருந்தாலும் அது நச்சுத்தன்மையானது, அழிக்கக்கூடியது. கடந்த இரவில் அகாடமி விருதுகளின் போது என்னுடைய நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது, மன்னிக்க முடியாதது. என்னை பற்றிய ஜோக்குகள் என் பணியின் ஒரு பகுதிதான், ஆனால் ஜடாவின் மருத்துவ ரீதியிலான பிரச்னை பற்றிக் கிண்டலாகக் குறிப்பிட்டதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் போனது. நான் உணர்ச்சி வசப்பட்டு அதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளேன்.

பொதுவெளியில் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் கிறிஸ். நான் வரம்பு மீறிவிட்டேன், நான் தவறு செய்திருக்கிறேன். அன்பும் கருணையும் நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை." எனக் கூறியுள்ளார்.

வில் ஸ்மித்தின் மனைவி ஜடா அதிகப்படியாக முடி உதிரும் அலோபீசியா எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது தலை முடிக் குறித்து ஜேக் செய்ததால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித் அவரை அடித்தார். வில் ஸ்மித்தின் செயல் பெண்களை உருவகேலி செய்யும் அனைவருக்கு ஒரு பாடம் எனவும் வன்முறை எதற்கும் தீர்வாகாது எனவும் நெட்டிசன்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?