உலகம் முழுவதும் மகள்கள் தினம் செப்டம்பர் மாதத்தில் வரும் நான்காவது ஞாயிற்றுக் கிழமையில் தினம் கொண்டாடப்படும். இந்த ஆண்டு, மகள்கள் தினம், செப்டம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு உறவுக்கும் ஒரு மகத்துவம் உள்ளது. சில உறவுகள் அவரவர்களுக்கு நெருக்கமானதாக இருக்கும்.
அது இரத்த பந்தமாக இருக்கலாம், தொப்புள் கொடி உறவாக இருக்கலாம், தாலி கொடி உறவாக இருக்கலாம்... ஆனால் மகள் என்ற பிணைப்பு சொல்லில் அடங்காதது.
பொதுவாக ஆண் பிள்ளைகளை அம்மாவிற்கும் பெண் பிள்ளைகளை அப்பாவிற்கும் ரொம்ப பிடிக்கும். இது எல்லார் வீட்டிலும் நடக்கும் ஒன்று. ஒரு தந்தைக்கு மகளுக்கும் இருக்கும் உறவை அவ்வளவு எளிதில் விவரிக்க முடியாது.
திரைப்படங்களில் கூட தந்தை மகள் உறவுகளை மிக அழகாவும் நேர்த்தியாகவும் காட்டியிருப்பார்கள். பாடல் வரிகளிலும் கூட அவ்வளவு அழகாக கூறிப்பார்கள்.
அவற்றில் சில,
படம் : தங்கமீன்கள்
பாடல் : ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு? உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!
படம் : என்னை அறிந்தால்
பாடல் : உனக்கென்ன வேணும் சொல்லு
நீ…
அடம் பிடித்தாலும்…
அடங்கிப் போகின்றேன்…
உன் மடி…
மெத்தை மேல்…
மடங்கிக் கொள்கின்றேன்…
படம் : அபியும் நானும்
பாடல் : வா வா என் தேவதையே
தந்தைக்கும் தாயமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே
படம் : சின்ன கண்ணம்மா
பாடல் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
எந்தன் வாழ்க்கையின்அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே
படம் : தெய்வ திருமகன்
பாடல் : ஆரிரோ ஆராரிரோ
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே
கருவறை இல்லை என்ற போதும் சுமந்திடத் தோணுதே
படம் : விஸ்வாசம்
பாடல் : கண்ணான கண்ணே…
அலை கடலின் நடுவே…
அலைந்திடவா தனியே…
படகெனவே உனையே…
பார்த்தேன் கண்ணே…
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust