Ajith , vijay, Surya Twitter
சினிமா

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #Worstfilm - என்ன காரணம்?

இந்தி நடிகர்கள் ஷாருக் கான், சல்மான் கான் மற்றும் அமீர் கான் தொடங்கி, தமிழ் நடிகர்கள் விஜய், அஜித் மற்றும் தெலுங்கு நடிகர்கள் மகேஷ் பாபு மற்றும் அல்லு அர்ஜுன் என பலதரப்பட்ட ரசிகர்களும் தங்களது கருத்துகளை #Worstfilm எனும் ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Priyadharshini R

கோலிவுட் மட்டுமல்லாது, பாலிவுட் என இந்திய திரைப்படங்களை விமர்சிக்கும் விதமாக Worstfilm என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. அப்படி மோசமான படங்களாக, நெட்டிசன்கள் கூறும் படங்களை பட்டியலிட்டு வருகின்றனர்.

சோசியல் மீடியாவை பொறுத்தவரை ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்து விவாதித்து வருகின்றனர். குறிப்பாக ட்விட்டரில் ஏதேனும் ஒரு ஹேஷ்டேக் டிரெண்டாவதும் வழக்கமாக இருக்கிறது.

அதில் சில விஷயங்கள் மட்டும் தான் குறிப்பிட்ட சில மாநிலங்கள் அல்லாது, வட மாநிலங்கள் தொடங்கி தென் தமிழகம் வரை விவாதிக்கப்படும். அவற்றில் சினிமா மற்றும் கிரிக்கெட் ஆகியவை இடம்பெறுகிறது.

அந்த வகையில் தான் தற்போது ட்விட்டரில் Worstfilm என்ற ஹேஷ்டேக் இணையவாசிகளால் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஹேஷ்டேக்கை தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களும் டிரெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த ஹேஷ்டேகில் இந்திய திரைப்பட நடிகர்களின் சிறந்த, மோசமான படங்களை பட்டியலிட்டு வருகின்றனர்.

அதோடு, ஒவ்வொரு நடிகருக்குமான சிறந்த இயக்குநர் மற்றும் ஜோடி ஆகியவை குறித்தும் ரசிகர்கள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.

இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் அமீர் கான் தொடங்கி, தமிழ் நடிகர்கள் விஜய், அஜித் மற்றும் தெலுங்கு நடிகர்கள் மகேஷ் பாபு மற்றும் அல்லு அர்ஜுன் என பலதரப்பட்ட ரசிகர்களும் தங்களது கருத்துகளை #Worstfilm எனும் ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர்கள் மட்டுமல்லாமல் இயக்குநர்களான ஷங்கர் மற்றும் எஸ்.எஸ். ராஜமௌலி ஆகியோரின் சிறந்த மற்றும் மோசமான படங்களையும் ரசிகர்கள் பட்டியலிட்டு வருகின்றனர்.

இதையடுத்து #Worstfilm எனும் ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?