Esther Calixte-Bea Twitter
Good News

நெஞ்சு முடியோடு டிக்டாக் செய்யும் ஓவியர் - பெண் உடலில் முடி இருப்பது தவறா என்ன?

தொடக்கத்தில் மற்ற பெண்களைப் போல தன் உடல் இல்லாததை எண்ணி வருந்தினார். அவரது உடல் உருவத்தினால், எஸ்தர் தன்னைத் தானே வெறுத்தார்.

NewsSense Editorial Team

பெண்கள் என்றாலே பலபலப்பாக பட்டுப் போன்ற மேனியோடு இருக்க வேண்டும். உடலில் தலை முடி தவிர எங்கும் முடி இருக்கக் கூடாது என்கிற பொதுப்புத்தி இந்தியாவில் மட்டுமின்றி, மேற்கத்திய நாடுகளிலும் பரவலாக இருக்கக் கூடிய ஒன்றே.

ஆனால் இன்றைய இணையப் பரவலினாலும், பெண்கள் தங்களுக்குப் பிடித்தவற்றை வெளிப்படையாகச் சொல்வதினாலும் ஒரு பெண் தன் முகத்தில் அல்லது வேறுபாகங்களில் இருக்கும் முடியை வைத்துக் கொள்வதும், அதைச் சவரம் செய்வதும் அவரது சொந்த விருப்பு வெறுப்புக்கு உட்பட்டதாக மாறி வருகிறது.

கேரளாவைச் சேர்ந்த ஷைஜா என்கிற பெண்மணி மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தனக்குப் பிடித்தாற் போல தன் முகத்தில் வளரும் மீசையை, ஆசையோடு வளர்த்து வருகிறார். அது குறித்து இங்கே விரிவாகப் படிக்கலாம்

கம்பீரமாய் மீசை முறுக்கும் கேரள பெண்மணி - என்ன காரணம் தெரியுமா?

இப்போது அதே போல மற்றொரு பெண், தன் மார்பகப் பகுதியில் வளரும் அளவுக்கு அதிகமான முடியை அப்படியே வைத்திருக்கிறார்.

எஸ்தர் கலிடெ பி (Esther Calixte-Bea) என்கிற 25 வயது இளம்பெண் கரீபியன் தீவுகளில் உள்ள ஹைதி நாட்டைச் சேர்ந்தவர். இவர் ஒரு விஷுவல் ஆர்டிஸ்ட்.

எஸ்தருக்கு மிக இளம்வயதிலிருந்தே மார்பகப் பகுதியில் அதிகமான முடி வளரத் தொடங்கியது. அது எஸ்தருக்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வைக் கொடுத்தது. மற்ற பெண்களைப் போல தன் உடல் இல்லாததை எண்ணி வருந்தினார். அவரது உடல் உருவத்தினால், எஸ்தர் தன்னைத் தானே வெறுத்தார்.

அவர் வளரும் போது, ஊடகங்கள், திரைப்படங்கள், பத்திரிகைகளில் ஒரு பெண்ணின் உடலில் முடி இருப்பது விரும்பத்தகாத ஒன்று என்பதைப் புரிந்து கொண்டார். மறுபக்கம் அவர் உடலில் வளரும் முடி தொடர்ந்து வளர்ந்து கொண்டே சென்றது.

இதனால் தனக்குள் இருக்கும் பாதுகாப்பின்மையோடு பெரிதும் போராட வேண்டி இருந்தது. தன் உடலில் வளரும் முடி வெளியே தெரியும் என்பதால் நீச்சலடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டி வந்தது. தொடர்ந்து சவரம் செய்வதோ, வேக்ஸிங் செய்வதையோ எஸ்தர் விரும்பவில்லை. இப்படி தன் உடலில் வளரும் கூடுதல் ரோமங்களோடு போராடிய எஸ்தர் 2019 காலகட்டத்தில் இப்பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டினார்.

மற்றவர்களின் விதிகளுக்கு உட்பட்டு வாழ்ந்தது அவருக்கு கடும் சோர்வைக் கொடுத்திருந்தது. தன் உடலில் வளரும் முடியும் தன் அடையாளங்களில் ஒன்று என்பதை உணர்ந்தார்.

இந்த உண்மையை அறிந்து கொண்ட பின் என் உடல் எப்படி இருக்கிறது என்பது குறித்து நான் அதிகம் கண்டுகொள்ளாத நிலைக்கு வந்துவிட்டேன். எனக்கு என்ன தேவை என்பதை நான் தேர்வு செய்து கொள்ள முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன். என் உடலையும் என் தோற்றத்தையும் சமூகம் அங்கீகரிக்கும் வரை நான் கத்திருக்க முடியாது என்றும் எஸ்தர் SWNS செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

எனக்கு என்ன பிடித்திருக்கிறதோ அதை நான் உடுத்திக் கொள்கிறேன். இந்த உலகத்தால் நான் பாதிக்கப்படமாட்டேன் என நான் எடுத்த தீர்மானத்தில் நான் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார் எஸ்தர்.

மேலும், நான் என் உடலில் வளரும் முடியைத் தொடர்ந்து வளர்க்கத் தீர்மானித்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டு, பாடி ஹேர் பாசிடிவிட்டியை (உடலில் வளரும் முடியை நேர்மறையாக எடுத்துக்கொள்வது) ஆதரித்து வருகிறார் எஸ்தர்.

கடந்த 2020ஆம் ஆண்டில் 'Januhairy' என்கிற பெயரில் பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தில் எஸ்தரின் பாடி ஹேர் பாசிடிவிட்டி தொடர்பான பணிகள் கிளாமர் யூகே என்கிற பத்திரிகை ஈர்த்தது.

பெண்கள், தங்கள் உடலில் உள்ள ரோமங்களை ஜனவரி மாதம் முழுக்க சவரம் அல்லது வேக்ஸ் செய்யாமல் இருக்க வேண்டும் எனச் சவால் விடுத்தது அப்பிரசாரம். பெண்கள் உடலில் ரோமங்கள் இருப்பது ஒரு சாதாரண விஷயமாக்க வேண்டும் என்பது தான் இப்பிரசாரத்தின் நோக்கம்.

கடந்த ஆண்டு கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் தன் பட்டப்படிப்பை நிறைவு செய்த எஸ்தர், தொடர்ந்து டிக்டாக் சமூக வலைத்தளத்தில் தன் மார்பகத்தில் அதிகம் வளர்ந்திருக்கும் ரோமங்களோடு சாதாரணமாகக் காணொளிகளைப் பதிவு செய்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?