இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த கார்களில் ஒன்று டாடா நிறுவனத்தின் நானோ. அதன் சிறிய தோற்றமும், முட்டைபோன்ற வடிவமும், பார்ப்பதற்க்கு க்யூட்டாக இருப்பதால், குழந்தைகள் மத்தியில் இது ரொம்ப ஃபேமஸ். மேலும் இதன் காம்பாக்டான அளவு, குறைந்த விலை என ஒரு சராசரி நடுத்தர குடும்பத்திற்கு ஏதுவாகவும் விலங்கியது நானோ. இதுவே ரத்தன் டாடாவின் எண்ணமாகவும் இருந்ததாம்
பழுதடைந்த சாலைகள், அதில் என்றும் எப்போதும் நிறைந்திருக்கும் வாகன நெரிசல், ஸ்கூட்டர்களில் பெற்றோருக்கு மத்தியில் சாண்ட்விச் போல நசுங்கிக்கொண்டு பிள்ளைகள் செல்வது அவரை பாதித்தால், இதை எதிர்கொள்ள மக்களுக்கு ஏதேனும் வழி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருந்ததாக டாடா கூறினார்.
"கட்டிடக்கலை படித்ததன் ஒரு சிறப்பு, நான் வேலை இல்லாமல் இருக்கும் நேரங்களில் எனக்கு வரைய வாய்ப்புகள் அதிகமாகவே இருந்தது. இதனால் முதலில் நான் நினைத்த டூடுலை வரைந்தேன்" என்ற டாடா, முதலில் டூடுல்கள் இரு சக்கர வாகனங்களைப் போல இருந்ததும், பின், ஜன்னல்கள் கதவுகள் இல்லாத நான்கு சக்கர வாகனங்களாக மாறி ஒரு ட்யூன் பக்கி போல காட்சியளித்தது. கடைசியில் அது ஒரு காராக இருக்கவேண்டும் என்று தான் முடிவெடுத்ததாக டாடா கூறுகிறார்.
"நானோ எப்போதும் மக்களுக்கான வாகனமாகவே இருந்தது" என்றார் டாடா. கடந்த 2020 ஏப்ரல் மாதத்திலிருந்து டாடா நிறுவனம் நானோ கார்கள் தயாரிப்பை நிறுத்தியது.
நானோ கார் உருவான கதையை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரத்தன் டாடா நினைவுக்கூறியது பலரின் மனங்களை நெகிழவைத்துள்ளது. டாடாவின் இந்த சுயநலமற்ற சிந்தனைகள் தான் அவரை இந்த உயரத்தில் வைத்துள்ளதாக்கவும் பலர் புகழ்ந்தும் தள்ளினர்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp