பெண்களின் ஹார்மோன் பிரச்சனை twitter
ஹெல்த்

Seed Cycling for Women : பெண்களின் ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் 2 பழக்கங்கள்

மினு ப்ரீத்தி

முதலில் வாழ்வியல் பழக்கம்

தூக்கம் தான் எல்லா ஹார்மோனையும் கட்டுக்குள் வைத்து உடலைப் பாதுகாக்கும். பெண்களின் சிறப்பு உறுப்புகளான கர்ப்பப்பையும் மார்பகங்களும் முழுக்க முழுக்க ஹார்மோன் கட்டுப்பாட்டில் இருப்பவை. இந்த ஹார்மோன்களை சீராக்குவது தூக்கம் மட்டுமே. தூக்கம் சீராக இருக்கும் பெண்ணுக்கு எந்த மாதவிடாய் தொல்லைகளோ மார்பக கட்டியோ வலியோ வராது. தூக்கம் சீராக இல்லாத பெண்ணுக்குக் கர்ப்பப்பை, சினைப்பை போன்ற எல்லாப் பெண் தொடர்பான சிறப்பு உறுப்புகளில் பிரச்சனைகள் வருகின்றன.

deep sleep

தூக்கம் எப்படி இருந்தால் பெண்கள் தப்பலாம்?

இரவு தூக்கம், 9-4 மணி வரை ஆழ்ந்த தூக்கமாக இருக்க வேண்டும். ஆழ்ந்த தூக்கம் 9 மணிக்கு இருக்க வேண்டுமெனில், நீங்கள் 8.30 படுத்திருந்தால் மட்டுமே 9 மணிக்கு ஆழ்ந்த தூக்கத்தை எட்ட முடியும். இந்தத் தூக்கத்தைப் பின்பற்றினாலே போதும். எல்லா ஹார்மோன் பிரச்சனைகளும் சரியாகும். முகத்தில் முளைத்த தாடி, மீசைகூட இடம் தெரியாமல் விழுந்துவிடும்.

நீங்கள் எந்தவித மருந்துகளும் எடுத்துக்கொள்ளாமலே, உங்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகள் குணமடையும். தூக்கம் மட்டுமே தீர்வு என்பதை யாரும் மறக்க வேண்டாம். நம் தூக்கத்தில் எல்லா ஆரோக்கியமும் அடங்கியுள்ளது. தூக்கத்தைப் பணையம் வைத்து செய்யும் இரவு பணிக்கு கூடுதல் சம்பளம் ஏன் தருகிறார்கள்? உங்கள் ஆரோக்கியத்தைத் தொலைத்து வேலை செய்கிறீர்கள் என்றுதான். அப்படிப் பார்த்தால் எல்லோருக்கும் தெரியும் தூக்கம் தொலைத்தால் நோய்கள் வரும் என. ஆனால், நாம் தான் எந்தப் புரிதலும் இன்றித் தேவையில்லாதவற்றைச் செய்து தூக்கத்தையும் தொலைத்து ஆரோக்கியத்தையும் தொலைத்துகொண்டிருக்கிறோம்.

அடுத்ததாக உணவுப்பழக்கம்

பசித்த பின் சாப்பிடுவதால், தேவையான உணவை உண்டு அதை மட்டுமே உடல் செரித்து நலமாக வாழ்வோம். பசி இல்லாத தருணங்களில் உண்டால் தேவையில்லாத கழிவுகள் சேர்ந்து நோயாகும். எனவே, பசிக்கும்போது மட்டுமே உண்ணுங்கள். பசி, ஆரோக்கியத்தின் ஆயுதம்.

ஹார்மோன் பிரச்சனைகள்

பால் பொருட்கள் மனிதனுக்குத் தகுந்தவை அல்ல. ஒரு மாடு கன்றுக்குட்டியை ஈன்றால், அது 3 வருஷங்களில் பெரிதாகி, அடுத்து இனப்பெருக்க வேலையில் ஈடுபடும். இந்த வளர்ச்சியைத் தரும் வகையில் பசும்பாலில் ஹார்மோன்கள் உள்ளன. ஒரு கன்று குட்டி வளர்ந்து 3 ஆண்டுக்குள் அது இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு குட்டி போடுவதற்கான வளர்ச்சி.. ஆனால், மனிதர்கள் குழந்தையில் இருந்து 18, 21 வயதுக்கு மேல் திருமணம் நடக்கிறது.

அதுவும் இந்தக் காலத்தில் 25 + மேல் திருமணம் நடந்து குழந்தை எனத் திட்டமிடுகிறார்கள். எனவே, பால் பொருட்களைச் சிறு வயதில் இருந்து எடுத்துக்கொண்டால் ஹார்மோன் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும்.

சீக்கிரம் வயதுக்கு வருவது, சீரற்ற மாதவிலக்கு, வயிறு வலி, ரத்த போக்கில் பிரச்சனை, கர்ப்பப்பைக் கட்டி, சினைப்பையில் கட்டி, மார்பகத்தில் கட்டி என ஏராளமான பிரச்சனைகள். பால், காபி, டீ, தயிர், மோர், வெண்ணெய், நெய், சீஸ், பன்னீர், ஃப்ரெஷ் கிரீம், பால் இனிப்புகள் போன்ற எல்லாமும் ஹார்மோன்களை மாற்றும் தன்மை கொண்டது. பால் உணவைத் தவிர்த்தாலே பெரிதளவு பிரச்சனைகளைச் சமாளிக்கலாம். பாலில் மட்டும் கால்சியம் இல்லை. பாலைவிட கேழ்வரகிலும், கருப்பு எள்ளு உருண்டையில் 110 மடங்கு கால்சியம் சத்து உள்ளது.

பால் பொருட்கள்

பிராய்லர் சிக்கன்

ஊசி, ஆன்டிபயாடிக்ஸ்போட்டு வளர்க்கப்படுவதால், அதே மோசமான ஹார்மோன்கள் நாம் உண்ணும்போதும் பாதித்து நம்மையும் ஹார்மோன் சிக்கல்களை கொண்ட உடலாக மாற்றும். முடிந்தால் நாட்டுக்கோழியைச் சாப்பிட பழகுங்கள்.

மைதா உணவுகள்

பிஸ்கெட், குக்கீஸ், கேக், பன், பரோட்டா, பப்ஸ், சமோசா போன்ற பெரும்பாலான பேக்கரி உணவுகள் மைதாவால் ஆனவை. இவை உடலின் கழிவாக சேர்ந்து முதலில் செரிமானத்தைத் தாக்கி பின்னர் மெட்டபாலிசத்தை மாற்றிப் பின்னர் ஹார்மோன்களையும் பாதிக்கிறது. பாக்கெட், பதப்படுத்தி உணவுகளைத் தவிர்க்கவும்.

எதைச் சாப்பிடலாம்?

  • அனைத்துப் பழங்கள்

  • காய்கறிகள்

  • கீரைகள்

  • மீன்கள், ஆடு இறைச்சி போன்றவை எடுத்துக்கொள்ளலாம்.

கீரைகள், ஆடு இறைச்சி

ஹார்மோன்களை சரியாக்கும் விதைகள் டயட் (Seed Cycling)

  • ஆளிவிதைகள்

  • பூசணி விதைகள்

  • சூரியகாந்தி விதைகள்

  • கருப்பு எள்

இந்த நான்கு விதைகளும் ஹார்மோன்களை சீராக்க உதவும்.

நாள் 1-14வது

ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு ஆளிவிதைகளைச் சாப்பிடவேண்டும்.

நாள் 1-14வது

ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்குப் பூசணிவிதைகளைச் சாப்பிடவேண்டும்.

நாள் 15-28வது

ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு சூரியகாந்தி விதைகளைச் சாப்பிடவேண்டும்.

நாள் 15-28வது

ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்குக் கருப்பு எள் சாப்பிடவேண்டும்.

ஒரு மாதம் தொடர்ந்து செய்தால் பெண்களின் ஹார்மோன் சீராகச் செயல்படும். இந்த விதைகள் டயட் தொடங்கினால் இதனுடன் தூக்கமும் மேற்சொன்ன உணவுப்பழக்கங்களைப் பின்பற்றுவதும் முக்கியம். மேற்சொன்ன 2 பழக்கங்களைக் கடைபிடிக்காமல் வெறும் விதைகளைச் சாப்பிடுவதால் மட்டும் பலன் கிடைக்காது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?