நீண்ட காலம் வாழ்ந்த நம் முன்னோர்களின் எளிய உணவுமுறை பற்றி தெரியுமா? Twitter
ஹெல்த்

நீண்ட காலம் வாழ்ந்த நம் முன்னோர்களின் எளிய உணவுமுறை பற்றி தெரியுமா?

மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் சரியான உணவு முறையை பின்பற்றுவதன் அவசியம் குறித்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த காலத்தில் எல்லாம் எப்படி 100 வருஷம் வாழ்ந்தார்கள்? அப்படி நீண்ட ஆயுட்காலம் கொண்டவர்கள் பின்பற்றிய எளிய உணவு ரகசியங்கள் குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்.

Priyadharshini R

நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையது தான் உணவு. இன்று நவீன உலகத்திற்கு ஏற்றவாறு துரித உணவுகள் உண்ணும் பழக்கம் நம்மிடையே பரவலாக காணப்படுகிறது. உணவே மருந்து என்ற நிலை மாறி, தவறான உணவு பழக்கத்தால் மருந்து உட்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் சரியான உணவு முறையை பின்பற்றுவதன் அவசியம் குறித்து வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த காலத்தில் எல்லாம் எப்படி 100 வருஷம் வாழ்ந்தார்கள்? அப்படி நீண்ட ஆயுட்காலம் கொண்டவர்கள் பின்பற்றிய எளிய உணவு ரகசியங்கள் குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்.

தாவரங்களை அதிகம் உட்கொள்ளுதல்

நீண்ட காலம் வாழும் மக்கள் தாவர அடிப்படையிலான உணவுகளை அதிகம் சார்ந்திருக்கிறார்கள். பழங்கள் முதல் காய்கறிகள், கீரை வகைகள் என தாவரத்தில் இருந்து கிடைக்கும் உணவுகளை அதிகமாக உட்கொள்கிறார்கள். அதற்காக இறைச்சி வகைகளை தவிர்க்கவில்லை, தாவரங்களில் இருந்து கிடைக்கும் உணவுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்.

ஒயின் குடிப்பது

நீண்ட காலம் வாழும் மக்கள் ஒவ்வொரு நாளும் சிவப்பு ஒயின் குடிப்பதாக தெரியவந்துள்ளது. கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஒவ்வொரு நாளும் ஐந்து அவுன்ஸ் அல்லது சிறிய கிளாஸ் அளவில் ஒயின் எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது.

ஒயின் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாகவும், இதய ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகவும் உள்ளது. இருப்பினும், மதுவை அதிகமாக உட்கொள்ளும்போது, ​​உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு போன்ற உடல்நலப் பிரச்சினைகளின் அபாயமும் அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஜப்பானில் உள்ள தீவான ஒகினாவாவில் உலகில் ஆரோக்கியமான மற்றும் நீண்ட காலம் வாழும் மக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு வாழும் மக்கள் 80 சதவீதம் தீவில் விளையும் பொருட்களை மட்டுமே உணவாக உட்கொள்ள வேண்டும் என்ற விதியை பின்பற்றி வருகின்றனராம்.

அதேபோல், மாலையில் மிகச்சிறிய அளவில் மட்டுமே உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் விதிகள் வைத்துள்ளனர்.

உடற்பயிற்சி

இந்த காலத்தில் உள்ளவர்கள் உடற்பயிற்சிக்காக ஜிம்களில் நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால் அந்த கால மக்கள் தோட்டக்கலை நடைபயிற்சி போன்றவற்றுடன் தங்கள் வழக்கமான வேலைகளையும் சேர்த்து உடற்பயிற்சியாக மாற்றிக்கொள்வதையே விரும்புகிறார்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?