இவற்றை சாப்பிட்டால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் - அறிவியல் சொல்லும் 6 உணவுகள்! Twitter
ஹெல்த்

இவற்றை சாப்பிட்டால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் - அறிவியல் சொல்லும் 6 உணவுகள்!

கார்பரேட் வேலைகளாலும், பெருநகர வாழ்க்கை முறையாலும் எந்திரமாகிப் போன நம் மனது மகிழ்ச்சியைத் தேடி அழைவது அதிசயமொன்றுமில்லை. மனசுக்கு அவ்வப்போது சின்ன பூஸ்ட் கொடுப்பது நமது கடமை. அதற்கு பின்வரும் உணவுகள் உதவக் கூடும்.

Antony Ajay R

எதுக்கு ப்ரோ நாம இவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிக்கணும்? என்ற விரக்தியின் உச்சபட்ச கேள்வியை ஜாலியாக ஒருவரிடம் கேட்டால் இரண்டு பதில்கள் வரும்.

1. சாப்பிடுவதற்கு தான்!

2. சந்தோஷமாக இருக்கத்தான்!

இந்த இரண்டு பதிகளையும் ஒருங்கே அனுபவிக்க நம்மால் முடியும். அதற்காக தான் இந்த கட்டுரை.

கார்பரேட் கம்பனிகளாலும், பெருநகர வாழ்க்கை முறையாலும் எந்திரமாகிப் போன நம் மனது மகிழ்ச்சியைத் தேடி அழைவது அதிசயமொன்றுமில்லை. மனசுக்கு அவ்வப்போது சின்ன பூஸ்ட் கொடுப்பது நமது கடமை. அதற்கு பின்வரும் உணவுகள் உதவக் கூடும்.

இந்த உணவுகள் நமக்கு மகிழ்ச்சியை வழங்குகிறது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது! சரி, அப்படி என்ன உணவுகள் காணலாம்...

1. டார்க் சாக்கலேட்

குழந்தைகள் சாக்கலேட் என்றாலே துள்ளிக்குதிக்க தொடங்கி விடுவார்கள். பெரியவர்களும் தானே? இந்த சாக்லேட் எப்போதும் நமக்கு சந்தோஷத்தை அளிக்க அதனுள் மூன்று பொருட்களை ஒழித்து வைத்திருக்கிறது.

1. டிரிப்டோபன் ( tryptophan )

2. தியோப்ரோமைன் ( theobromine )

3. ஃபைனிலெதிலாலனைன் ( phenylethylalanine )

டிரிப்டோபன் ஒரு அமினோ ஆசிட், நமது மூளையில் செரொடோனின் உற்பத்திக்கு உதவுகிறது. தூக்கம், செரிமானம், காயங்களை குணப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய செயல்களுக்கு இது பயன்படுகிறது.

தியோப்ரோமைன் நமது மனநிலையை சீர் செய்ய உதவும்.

மற்றொரு அமினோ ஆசிட்டான ஃபைனிலெதிலாலனைன் மகிழ்ச்சி ஹார்மோனான டோபோமைனை தூண்டுகிறது.

2. வாழைப்பழங்கள்

வாழைப்பழங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை தருகின்றன. செரோடின் உற்பத்திக்கு வாழைப்பழங்கள் உதவும். ஆனால் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் வாழைப்பழங்கள் மறைமுகமாக பணியாற்றுகின்றன.

வாழைப்பழங்கள் வைட்டமின் பி6 என்ற சத்தைக் கொண்டிருக்கின்றன. இது செரொடின் உற்பத்திக்கு தேவையான ஒன்று. சராசரி அளவுள்ள வாழைப்பழத்தில் 0.4 மில்லி கிராம் பி6 உள்ளது. இது ஒரு நாளுக்கு தேவையான அளவில் 25%.

வாழைப்பழத்தின் மஞ்சள் நிறம் மகிழ்ச்சி, ஆற்றலின் நிறமாக கருதப்படுவதும் நம் மூளைக்குத் தெரியும்!

3. தேங்காய்

Coconut

சோம்பலாகவும், அழுத்தமாகவும் உணர்பவர்கள் தேங்காய் சாப்பிட்டால் அது அவர்களை சுட்டிப்பாக மாற்ற உதவியாக இருக்கும். மீடியம் சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் (medium-chain triglycerides அல்லது MTCs) என்ற கொழுப்பு தேங்காயில் நிறைந்திருக்கிறது. இது உங்களுக்கு சக்தியை அளிக்கும்.

2017ம் ஆண்டு விலங்குகளில் நடத்தப்பட்ட சோதனை தேங்காய் பால் படபடப்பைக் (anxiety) குறைக்க உதவுகிறது, மனிதர்களில் இது எப்படி செயல்படுகிறது என்பதைக் கண்டறிய சோதனைகள் நடத்தப்பட வேண்டும்.

4. காபி

Coffee

இந்த உலகில் குறைந்தது 100 கோடி பேர் காபி பருகுவதாக ஆய்வுகள் கூறுகிறது. ஒரே நேரத்தில் அனைவரும் காபி பருகினால் உலகமே ஒரு மகிழ்ச்சிப் பிரதேசமாக மாறிவிடும்.

காபி மன அழுத்ததைக் குறைக்கும் என்பதை பல ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

அத்துடன் காபி அருந்துபவரின் மனநிலையையும் சீர் செய்ய உதவும். காபி நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்பதற்காக குடித்துக்கொண்டே இருக்கக் கூடாது. அளவுக்கு மீறினால்....

5. அவகாடோ அல்லது பட்டர் ஃபுரூட்

Avocado

காபி அதிகமாக உண்பதனால் நமது உடலுக்கு பிரச்னை. ஆனால் அவகாடோ நம் பாங் பாலன்ஸுக்கு பிரச்னையை ஏற்படுத்தும்.

நகைச்சுவையை விட்டுவிட்டு மேட்டருக்கு வருவோம். choline என்ற சத்து அவகாடோவில் நிறைந்திருக்கிறது. இது தான் அவகாடோ நமக்காக ஒளித்து வைத்திருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. choline நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் மனநிலையை சமன் செய்யவும் உதவும்.

2020ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் அவகாடோவில் இருக்கு கொழுப்புகள் பெண்களில் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் அவகாடோவில் வைட்டமின் பி -யும் இருக்கிறது!

6. பெர்ரிகள்

Berries

பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும் என்பதை பல ஆய்வுகள் கூறுகின்றன. மனநலத்துக்கும் பழங்களை உட்கொள்வதற்கும் தொடர்பிருப்பதனை 2016ம் ஆண்டு நடைபெற்ற ஒரு மெட்டா - அனலைசிஸ் ஆய்வு உறுதிபடுத்தியுள்ளது.

பெர்ரி பழங்களில் அதிகமாக ஆன்டிஆக்ஸைடுகள் இருக்கிறது. இவை மன அழுத்தம் தொடர்பான பாதிப்புகளைக் குறைக்கிறது. குறிப்பாக ப்ளூபெர்ரி பழச்சாறு நம்மை இளமையாக வைத்திருக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அதிக பழங்கள் - அதிக மகிழ்ச்சி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?