Bathing

 

Facebook

ஹெல்த்

குளியல் வைத்தியம் : நாம் செய்ய வேண்டிய 7 குளியல் முறைகள்

குளியலில் நிறைய வகை உள்ளதாக இயற்கை மருத்துவம் சொல்கிறது. வெறும் தண்ணீரை வைத்துப் பல்வேறு நோய்களைத் தீர்க்க உதவுவது இயற்கை மருத்துவம்தான்.

மினு ப்ரீத்தி

குளியலில் நிறைய வகை உள்ளதாக இயற்கை மருத்துவம் சொல்கிறது. வெறும் தண்ணீரை வைத்துப் பல்வேறு நோய்களைத் தீர்க்க உதவுவது இயற்கை மருத்துவம்தான். அதில் ஒன்று குளியல் வகைகள். பல்வேறு குளியல் வகைகள் பல நோய்களுக்குத் தீர்வாகவே அமைகின்றன. அதில சில குளியல் முறைகளை நாம் வீட்டிலே எளிமையாகச் செய்துவிட முடியும். அத்தகைய குளியல் முறைகளைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

எனிமா குளியல்

மலக்குடல் குளியல் - எனிமா குளியல்

மலச்சிக்கலே அனைத்து நோய்களுக்கும் முதல் காரணமாக இருக்கும். மலச்சிக்கலை உடனடியாகத் தவிர்த்து, மலத்தை உடனே வெளியேற்ற ‘எனிமாக் குளியல்’. மலக்குடலை சுத்தப்படுத்தும் குளியல் இது. மலக்குடலில் உள்ள கழிவுகளை வெறும் தண்ணீர் சுத்தப்படுத்தி நோயின்றி வாழ வைக்கும் ஒரு அற்புத குளியல் முறையாகும். எனிமாக் குவளை இயற்கை பயிற்சி மையங்கள், ஆர்கானிக் கடைகள், காதி கிராஃப்ட் ஆகிய இடங்களில் வாங்கலாம். இதை எப்படிப் பயன்படுத்துவது என இயற்கை மருத்துவர்கள் விளக்கியிருப்பார்கள். மலச்சிக்கல், சளி, காய்ச்சல், தலைவலி, மூலம், மூட்டு வலி, வயிறு உபாதைகள், தீராத நோய் உள்ளவர்கள் அனைவருக்கும் இந்த எனிமா குளியல் பயன் தரும்.

இடுப்புக் குளியல்

இடுப்புக் குளியல்

உக்கிரமான ஜூரத்தின் வெப்பம் தணிகிறது. குடலில் கழிவுப் பொருட்கள் அழுகும்போது ஏற்படும் உஷ்ணம் காய்ச்சலாக, ஜூரமாக வேறு பல கோளாறுகளாக வெளிப்படுகின்றன. இடுப்புக்குளியல் ஜூரத்தைத் தணிக்கும்.

உடம்புக் குளியல்

உடம்புக் குளியல்

இக்குளியலால் ரத்த ஓட்டம் சுறுசுறுப்பாக நடைபெறும். இக்குளியலுக்கு முதுகு குளியல் தொட்டியைப் பயன்படுத்தலாம். தொட்டியில் நோயாளியின் பின் உடம்பு முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கவேண்டும். அந்த அளவுக்குத் தண்ணீர் இருக்க வேண்டும். நோயாளியின் பாதங்களைத் தொட்டிக்கு வெளியிலோ தரையிலோ அல்லது முக்காலியின் மீதோ வைத்திருக்கலாம். தலையைத் தண்ணீரில் நனையாதவாறு வைக்கவும். தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் உடம்பின் பகுதிகளையும் குறிப்பாக வயிற்றை ஒரு துணியைக் கொண்டு நன்றாகத் தேய்க்கவும். இதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகும்; சுறுசுறுப்பாகும். இவ்வாறு 20 நிமிடங்கள் தண்ணீருக்குள் படுத்திருந்த பின் எழுந்து உடம்பைத் துவட்டிக் கொள்ளலாம்.

அங்கக் குளியல்

அங்கக் குளியல்

தன் உடம்பு முழுவதும் ஒரே நேரத்தில் நீரை ஊற்றிக் குளிக்க முடியாதவர்கள். உடம்பின் ஒவ்வொரு அங்கத்தையும் தனித்தனியாகக் குளிப்பாட்டிக் கொள்வதே அங்கக் குளியல்.

வயிற்றுக் குளியல்

வயிற்றுக் குளியல்

இடுப்புக் குளியல் அல்லது உடம்புக் குளியல் செய்ய முடியாதவர்கள் வெறும் கீழ் உள்ளாடையை அணிந்து கொண்டு ஒரு முக்காலியின் மீது உட்காரவும். நம் முன்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்துக்கொண்டு இரண்டு கைகளையும் நன்றாக நனைத்து ஈரக் கைகளால் வயிறு முழுவதையும் இடது விலாவிலிருந்து வலது விலாவுக்கும் வலது விலாவிலிருந்து இடது விலாவுக்கும் மாறி மாறித் தேய்த்துக்கொள்ளவும். மேல் வயிற்றில் இருந்து அடி வயிறு வரை தேய்க்க வேண்டும். இப்படி 20 நிமிடங்கள் அடிக்கடி கைகளைத் தண்ணீரில் நனைத்துக்கொண்டு செய்த பின் உலர்ந்த துணியினால் வயிற்றைத் துடைக்கவும்.

வயிற்றுக் குளியல் செய்வதால், நுரையீரலும் இதயமும் கீழேயுள்ள மற்ற உள்ளுறுப்புகளும் புத்துயிர் பெற்று சுறுசுறுப்பாக வேலை செய்யும். செரிமான சக்தி சரியாகும். மலச்சிக்கல் நீங்கும்.

பாதக் குளியல்

பாதக் குளியல்

இக்குளியல் செய்வதால் தீராத தலைவலி தீரும். எலும்புருக்கி நோய், கொடிய நோய்களைக் கூடக் குணமாக்கும்.

ஒரு தொட்டியில் நம் கணுக்கால்கள் மூழ்கும் அளவுக்குப் பொறுக்கும் சூடான வெந்நீரை ஊற்றி 15-20 நிமிடங்களுக்குப் பின் காலை வெளியே எடுத்து அவற்றின் மீது கொஞ்சம் குளிர்ந்த நீரை ஊற்றி உடனே துவட்டி விடவேண்டும். இக்குளியல் நடைப்பெறும் சமயம் தலையில் ஈரத்துணியைக் கட்டிக்கொள்ள வேண்டும்.

கீழ்வாதம், கணுக்கால் சுளுக்கு, தடைப்பட்ட மாதவிலக்குப் பிரச்சனைகளுக்கு இப்பாதக் குளியல் நல்ல பலனளிக்கும்.

வெந்நீருக்குப் பதிலாகத் தண்ணீரையும் பயன்படுத்தி 10 நிமிடங்கள் வரை செய்யலாம். மூளை, கல்லீரல், சிறுநீர்ப்பை, வயிறு, குடல்களில் உள்ள நோய்களுக்கு இச்சிகிச்சை மிகவும் நல்லது. பாதங்களில் எப்போது வியர்வை வருபவர்களும் செய்யலாம்.

வெந்நீர் ஒரு தொட்டியிலோ, தண்ணீர் ஒரு தொட்டியலுமாக வைத்துக்கொண்டு கால்களை 2 நிமிடத்துக்கு ஒருமுறை மாற்றி மாற்றி எடுப்பதும் சூடும் குளிர்ச்சியும் கலந்த ‘பாதக்குளியல்’ எனப்படும். இதனால் தீராத தலைவலி சரியாகும். தலைவலிக்காக இச்சிகிச்சையைச் செய்யும்போது, தலை உச்சியின் ஒரு ஈரத்துணியை வைத்து அழுத்திக் கொடுப்பது நல்லது.

பாதக்குளியலை யார் செய்யக் கூடாது?

மாதவிலக்குச் சமயத்தில் பெண்கள் செய்யக் கூடாது. இடுப்பிலோ அடிவயிற்றிலோ நுரையீரலிலோ வீக்கம் உள்ளவர்கள் இக்குளியலைத் தவிர்க்கலாம்.

தலைக்குளியல்

தலைக்குளியல்

இடுப்புக்குளியல், முதுகுத்தண்டு குளியல் முடிந்தவுடன் உடம்பில் உள்ள சூடு தலைக்கு ஏறுவது இயல்பு. எனவே மற்ற குளியல்கள் முடிந்த பிறகு தலைக்குளியல் குளித்திட வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?