வெயில் காலத்தில் ஏற்படும் கண் வறட்சி; எப்படி தடுக்கலாம்? Twitter
ஹெல்த்

வெயில் காலத்தில் ஏற்படும் கண் வறட்சி; எப்படி தடுக்கலாம்?

இந்த கோடை காலத்தில் உங்கள் கண்கள் வறட்சியை குறைத்து ஆரோக்கியமாக கண்களை பாதுகாக்க சில டிப்ஸ் தெரிந்துகொள்ளுங்கள்.

Priyadharshini R

வெயில் காலத்தில் இயல்பாகவே நமது உடல் நீர் சத்தை இழந்து காணப்படும் நிலையில் கண்கள் வறட்சி அதிகம் ஏற்படும். இந்த கோடை காலத்தில் உங்கள் கண்கள் வறட்சியை குறைத்து ஆரோக்கியமாக கண்களை பாதுகாக்க சில டிப்ஸ் தெரிந்துகொள்ளுங்கள்.

காலை எழுந்தவுடன் முதல் வேலையாக பல் துலக்கும் போது உங்கள் கண்களை குளிர்ந்த நீர் கொண்டு கழுவுங்கள். காலையில் எழுந்தவுடன் கண்களில் சேர்ந்திருக்கும் அழுக்குகளை நீக்கி மசாஜ் செய்து கழுவுங்கள்.

நீண்ட நேரம் திரைகளை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். வேலை காரணமாக நீண்ட நேரம் பார்க்க வேண்டிய கட்டாயம் இருந்தால், அரை மணி நேரத்திற்கு ஒரு முறை திரைகளை விட்டு விலகி தூரத்தில் இருக்கும் பசுமையான காட்சிகளை காணுங்கள்.

வெயில் காலத்தில் தோல், கண்கள் அதிகமாக வறட்சி அடையும். அதனால் அவ்வப்போது முகத்தையும் கண்களையும் கழுவிக் கொண்டே இருங்கள். கழுவும் போது முடிந்தவரை குளிர்ந்த நீரில் கழுவ முயற்சி செய்யுங்கள்.

தினசரி இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் . இது ஒட்டுமொத்த உடலை நீரேற்றமாக வைப்பதுடன் கண்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.

கற்றாழையில் உள்ள ஜெல்லை நன்கு தண்ணீரில் அலசி கண்களின் மீது மசாஜ் செய்யுங்கள். இது கண்களுக்கு குளிர்ச்சி தரும்.

கண்களுக்கு வெள்ளரிக்காய் வைப்பது போல சாதாரணமாக கண் எரிச்சல் அல்லது கண் வறட்சி ஏற்படும் சமயங்களிலும் வெள்ளரிக்காயை வெட்டி கண்களில் வைக்கலாம்.

கண்ணுக்கு மை அழகு தான் என்றாலும் ரசாயனத்தால் ஆன கண்மைகளை போடுவது கண்ணுக்கு உறுத்தல் அல்லது அலர்ஜியை ஏற்படுத்தலாம். வெளியில் செல்லும்போது மட்டும் பயன்படுத்துங்கள்.

தினசரி இரவு தூங்குவதற்கு முன்பாக கண்களின் இமை மீது தேங்காய் எண்ணெயை லேசாக வைத்து மசாஜ் செய்து தூங்குவது கண்ணீர் சுரப்பிகளை தூண்டச் செய்யும். கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?