Alcohol consumption ஆதிரை
ஹெல்த்

இரான் : கள்ளச் சாராயம் அருந்திய 8 பேர் பலி - நடந்தது என்ன?

இரானில் பந்தர் அபாஸ் என்ற நகரில் வீட்டில் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை குடித்து 8 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 17 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 30 பேருக்கு டயாலிஸ் சிகிச்சையும் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆதிரை

இரானில் வீட்டில் மதுபானம் தயாரித்து அருதியதில், 8 பேர் உயிழந்துள்ளனர். இவர்கள் அருந்திய பானத்தில் ஏதேனும் ஒரு பொருள் விஷமாக மாறியிருக்க வாய்ப்புள்ளதாகவும், அதுவே மரணத்திற்கும் காரணியாக இருந்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது

இரானில் மதுக்குடிப்பது, தயாரிப்பது, விற்பது என அனைத்துமே சட்டவிரோதமாகும். முஸ்லிம் ஒருவர் மதுக்குடித்தால் அவருக்கு 80 கசையடிகள் வழங்கப்படும்.

சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த எட்டு பேரை இதுவரை கைது செய்துள்ளதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவிக்கிறது.

Eight arrested

மேலும் இதுகுறித்து சோதனையில் ஈடுபட்டபோது 1,278 லிட்டர் ஆல்கஹால் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்துள்ளதாக பந்தர் அபாஸ் நகர காவல்துறையின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த மதுபானத்தில் எது விஷமாய் மாறிப்போனது என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

Home brewed alcohol

ஆனால் இரானில் சமீப நாட்களில் இம்மாதிரியாக சட்டவிரோத மதுபானத்தை குடித்து பலர் உயிரிழந்து வருகின்றனர். இம்மாதிரியாக வீடுகளில் தயாரிக்கப்படும் மதுபானங்களில் மெத்தனால் சேர்க்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இரானில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மதுபானங்களை குடித்து இதுவரை 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிறியளவிலான மெத்தனாலை உண்டாலும்கூட அது பார்வையை பறித்துவிடும் அல்லது உயிரிழக்க நேரிடும்.

விகடன் வாசகர்களுக்காக பிற தளங்களில் உள்ள முக்கிய செய்திகளை வழங்கும் முயற்சி இது. | #NewsSenseTNContent

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?