<div class="paragraphs"><p>Happy</p></div>

Happy

 

Twitter

ஹெல்த்

தினமும் மகிழ்ச்சியாக இருக்கச் செய்ய வேண்டிய 9 செயல்கள் | Nalam 360

NewsSense Editorial Team

அவற்றைச் செய்வதாலும் நம் உடல் மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்க வைக்கும். இயற்கையான முறையில் நாம் மகிழ்ச்சியாக வாழ செரோடொனின், ஆக்ஸிடோசின் எனும் ஹார்மோன்கள் உதவும்.

செரோடொனின் என்பது கெமிக்கல். நல்ல கெமிக்கல் எனப் புரிந்துகொள்வோம். இது நரம்பு செல்களுக்கு சிக்னலை அனுப்பும். பொதுவாக இந்த செரொடொனின் செரிமான மண்டலத்தில் காணப்படுகிறது. ரத்தத்தட்டுக்கள் வழியாக மத்திய நரம்பு மண்டலத்துக்கு வருகிறது. உடலில் உணர்வுகளை உருவாக்கும் முக்கியப் பொறுப்பு, செரோடொனினுக்கு உண்டு. செரோடொனினை, Natural mood stabilizer என்பார்கள். தூக்கம், உணவு, செரிமானம் ஆகியவற்றுக்கு இந்த நல்ல கெமிக்கல் உதவுகிறது.

சன் லைட்

1.சன் லைட்

சூரிய வெளிச்சம் யார் மேல் படுகிறதோ அவர்களுக்கு, மூளையில் இருந்து செரோடொனின் சுரக்கும். நல்ல மூட் உருவாகவும் செரோடொனின் உதவும். இதனால் தூக்கமும் நன்றாக வரும். போதிய சூரிய வெளிச்சம் கிடைக்காவிட்டால் தூக்கம் பாதிக்கும். போதிய சூரிய வெளிச்சம் கிடைக்காத நபருக்குப் பசியின்மை பிரச்சனையும் இருக்கும்.

விட்டமின் பி

2.விட்டமின் பி

விட்டமின் B1, b3, b6, b9 ஆகியவை செரோடொனின் சுரக்க உதவும் சத்துகள். பி12 குறைபாடு இருந்தாலும் மூட், எல்லா உணர்வுகளும், தூக்கம் ஆகிய மனோரீதியான தொந்தரவுகள் வரும். பி விட்டமின்கள், நரம்பு மண்டலத்தைச் சீராக வேலை செய்ய வைக்க உதவும்.

புரோட்டீன்

3.புரோட்டீன்

புரோட்டீன் எனும் புரதச் சத்துகளும் நல்ல கெமிக்கல் உருவாக உதவுகிறது. மீன்கள், முட்டை, கீரைகள், இறைச்சி வகைகள், விதைகள், சோயா, நட்ஸ் ஆகியவை புரோட்டீன் சத்துகள் நிறைந்துள்ள உணவுகள்.

தூக்கம்

4.தூக்கம்

தூக்கம் சரியாக இல்லாதவருக்கு செரோடொனின் எனும் நல்ல கெமிக்கல் உடலில் சுரக்காது. தூக்கம் சீராக இருந்தால் ஹாப்பி ஹார்மோனாகிய செரோடொனின் நன்றாக வேலை செய்யும். தினமும் 9 மணிக்கே தூங்கி விட வேண்டும். 11-3 மணியளவில் ஆழ்ந்த தூக்கம் இருப்பது அவசியம். மகிழ்ச்சி உணர்வுக்குத் தூக்கம் மிகவும் முக்கியம்.

நட்ஸ் அண்ட் சீட்ஸ்

5.நட்ஸ் அண்ட் சீட்ஸ்

முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளும் சரி, ஆளிவிதை, சூரியகாந்தி விதைகள் போன்ற விதைகளும் சரி. உடலுக்கு மிகத் தேவையான சத்துகள் கொண்ட உணவுகள். இது மகிழ்ச்சி உணர்வை தரும். நல்ல கெமிக்கலை உருவாக்கும். மேலும் இதன் சத்துகள் உடலை ஆரோக்கியமாக்கும்.

உணவு

6.உணவு

ஆரோக்கியம் தருகின்ற உணவுகளைத் தரமான உணவுகள் எனலாம். ஆரோக்கியம் தராத உணவுகளைத் தரமற்ற உணவுகள் எனலாம். ஒரு பாக்கெட் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் உங்களுக்கு ஆரோக்கியம் தந்துவிடாது. ஆதலால், அதைத் தரமற்ற உணவு என்றே சொல்லலாம். வாழைப்பழம் போன்றவை உடலில் மகிழ்ச்சி தரும் கெமிக்கலை உருவாக்க உதவுகிறது. அந்த வரிசையில், மீன்கள், நட்ஸ், விதைகள், முட்டை, அன்னாசி… அன்னாசியில் டிரிப்டோபான் எனும் சத்துகள் நிறைத்துள்ளன. இதை உண்பதால் மகிழ்ச்சி தரும் கெமிக்கல்கள் உருவாகும்.

Exercise

7.உடற்பயிற்சி

உடலுழைப்பே இல்லாத வாழ்வியல் முறையில் நாம் இருக்கிறோம். எதற்கு எடுத்தாலும் மருந்து, மாத்திரைகள் என மருத்துவரை சந்திக்க ஓடுகிறோம். ஆனால், எவரும் வாழ்வியலை மாற்றிகொள்ள முன்வருவதில்லை. அப்படிப் பார்த்தால், உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தருகிறவர்களுக்கு மகிழ்ச்சி ஹார்மோன் சுரக்கும். உடற்பயிற்சியால் மகிழ்ச்சி உணர்வு கிடைக்கும். நடையோ மெது ஓட்டமோ யோகாவோ எது வேண்டுமானாலும் செய்யுங்கள்.

மசாஜ்

8.மசாஜ்

மசாஜ் செய்வதால் நல்ல கெமிக்கல் நேரடியாகச் சுராக்காது. ஆனால், அதில் மறைமுகத் தொடர்பும் இருக்கிறது. மசாஜ் செய்துகொள்வதன் மூலமாகக் கிடைக்கும் மனநல நன்மைகளால், உங்களது உடல் என்டார்ஃபின்களை சுரக்கும். இதன் மூலம் உங்களுக்கு ஹாப்பி கெமிக்கல்ஸ் சுரந்திடும். நாள் முழுவதும் போனஸாக உங்களுக்குப் புத்துணர்வும் கிடைக்கும். மசாஜ் செய்துகொள்வதால், இடது பக்க மூளைக்குத் தூண்டுதல் கிடைக்கும். உடலை ஆக்டிவாக வைத்திருக்கும். வலது பக்க மூளை எப்போதும் சோகம், மன அழுத்தம் போன்றவற்றை ஆக்டிவேட் செய்யும். ஆனால், மசாஜ் மூலம் நமக்கு இடது பக்க மூளை ஆக்டிவேட் ஆகிறது நல்ல விஷயம்தானே…

கட்டி பிடித்தல்

9.கட்டி பிடித்தல்

வசூல்ராஜா படத்தில் கமல் சொல்வதுபோல கட்டிபிடி வைத்தியத்துக்கு நிறையவே மேஜிக்கல் பலன்கள் இருக்கத்தான் செய்கிறது. நமக்குப் பிடித்த நபர் நம்மை அன்புடன் அணைக்கும்போது நமக்கு நல்ல கெமிக்கல் கிடைக்கிறது. மனதுக்கு அமைதியும் ஓய்வையும் தருகிறது இந்தக் கட்டிபிடித்தல். ஆக்ஸ்டோசின் எனும் ஹார்மோன் சுரப்பதால் கட்டிபிடித்தல் சில சமயங்களில் நம் உடலுக்கு டாக்டராகவே மாறிவிடுகிறது. மாத்திரை மருந்துகள் கொடுப்பதைவிட கட்டிபிடித்தல் மன அழுத்தத்தைப் போக்குகிறது என்கிறார்கள் வல்லுநர்கள். 20 நொடிவரை கட்டிபிடித்தாலே ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுரந்து நம் நிலையைச் செம்மையாக்குகிறது. மகிழ்ச்சியைப் பெற கட்டி பிடித்தல் சிறந்த வைத்தியமாகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?