Oil Pulling

 

Twitter

ஹெல்த்

ஒரு பயிற்சி : வாய் முதல் வயிறு வரை உள்ள கிருமிகளை அழிக்கும்!

நமது 32 பற்களும் மூன்று ஜோடி உமிழ் நீர் சுரப்பிகளும் ஆயுள் முழுக்க உணவை மென்று சுவைக்க உதவும் நாக்கும் ஈறுகளும் பற்களும் ஆரோக்கியமாக இருக்க நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு பயிற்சி

மினு ப்ரீத்தி

நமது 32 பற்களும் மூன்று ஜோடி உமிழ் நீர் சுரப்பிகளும் ஆயுள் முழுக்க உணவை மென்று சுவைக்க உதவும் நாக்கும் ஈறுகளும் பற்களும் ஆரோக்கியமாக இருக்க நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு பயிற்சி. இந்தப் பயிற்சியால் வாய் துர்நாற்றம் இருக்கவே இருக்காது. சிறுகுடலினால் சத்து முழுமையாக உறிஞ்ச வாயின் வேலையும் பற்களின் வேலையும் தடை இல்லாமல் நடக்க இந்த ஒரு பயிற்சி மட்டும் போதும். அது என்ன பயிற்சி?

எண்ணெய் கொப்பளிப்பு என்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களால் வாயைச் சுத்தம் செய்யக் கடைபிடிக்கப்பட்டு வந்த முறை. காலபோக்கில் வாழ்வியல் மாற்றத்தில் இந்தப் பழக்கம் மறக்கடிக்கப்பட்டாலும் வாயையும் பற்களையும் சுத்தம் செய்ய எளிய முறையாகவும் மிகவும் பலன் அளிக்கக்கூடிய முறையாகவும் இருப்பது எண்ணெய் கொப்பளிப்பு முறை மட்டுமே.

Oil Pulling

எப்போது எண்ணெய் கொப்பளிப்புச் செய்யலாம்?

காலையில் எழுந்ததும் எதுவும் சாப்பிடாமல் 5-10 மில்லி லிட்டர் சுத்தமான நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, வாயை மூடிக்கொண்டு பற்களின் இடைவெளிக்கெல்லாம் எண்ணெய் சென்று வருமாறு செய்ய வேண்டும். இவ்வாறு 10-15 நிமிடங்கள் வரைக் கொப்பளிக்கலாம். அதாவது வாயில் எண்ணெயின் வழவழப்பு நீங்கியதும் துப்பிவிடலாம். துப்பும் எண்ணெய் வெள்ளைத் திரவமாக மாறி இருக்க வேண்டும். அந்தளவுக்குக் கொழகொழப்பு நீங்கிய பிறகே துப்ப வேண்டும்.

வாயில் உள்ள எண்ணெயை எக்காரணத்துக்கும் விழுங்குதல் கூடாது. எண்ணெய் கொப்பளிப்பு செய்தவுடன், சாதாரணத் தண்ணீரால் வாயைக் கொப்பளித்து 3 முறை துப்பலாம். அதாவது இதை வாயைக் கழுவுவது என்றுகூடச் சொல்லலாம்.

எண்ணெய் கொப்பளிக்கச் சரியான நேரம் காலையில்தான். ஆனால், நேரம் இல்லாதவர்கள் இரவு தூங்கும் முன்கூடச் செய்யலாம்.

எண்ணெய் கொப்பளிப்பு

வாயில் எண்ணெய் எப்படி வேலை செய்கிறது?

எண்ணெய் கொப்பளிப்புச் செய்கையில், நுண் கிருமிகளை எண்ணெய் சூழ்ந்து கொள்வதால், கிருமிகள் அப்படியே லாக் ஆகி பிராணவாயு கிடைக்காமல் செயல் இழந்து போய், நிலைக்குலைந்து விடும்.

மேலும், நாம் சில நிமிடங்கள் வரை கொப்பளித்துக்கொண்டே இருக்கையில், நமது உமிழ்நீருடன் கலந்து எண்ணெய் பசை குழம்பு போல மாறுகிறது. உமிழ்நீரில் உள்ள தாது உப்புக்கள் பசை குழம்புடன் கலந்து மென் சோப்புத்தன்மை கொண்ட வெள்ளை திரவமாக மாறிவிடுகிறது.

இந்தச் சோப்புத் திரவம் செயல் இழந்த நுண்கிருமிகளைக் கொன்று நாம் வெளியில் அந்தத் திரவத்தைத் துப்புவதால் வெளியேறிவிடுகிறது.

இதன் மூலம் நம் வாயில் எந்த வித நுண்கிருமிகளும் இருக்க வாய்ப்பு இல்லை. நுண்கிருமிகளால் ஏற்படும் நோய்களும் வர வாய்ப்பே இல்லாமல் ஆகிவிடும்.

நம் வாயில் உள்ள மென் திசுக்களுக்கு எந்தவித பாதிப்பும் பக்கவிளைவும் வருவதில்லை. நல்லெண்ணெய் முழுக்க எள்ளில் இருந்து எடுக்கப்பட்டதால் எந்தக் கெமிக்கல்களின் தலையீடும் இல்லை.

நல்லெண்ணெயின் மருத்துவக் குணம் நமக்குப் பல நன்மைகளைச் செய்திடும். வாயில் உள்ள மென் திசுக்களில் ஏற்படுகின்ற வெடிப்பு, வெட்டுக்காயங்கள், பல் கடி காயம், நாக்குப் புண், வாய் புண், கீறல்கள் போன்ற அனைத்தும் குணமாகிவிடும். சொத்தையை ஏற்படுத்தும் கிருமிகள் முழுவதுமாக வெளியேறும்.

பற்கள் இடையில் வாழும் கிருமி

பற்கள் இடையில் வாழும் கிருமிகளை அழிப்பது..

இளம் வயதில் பற்கள் சீராக இருக்கும். வரிசையாக அழகாக இருக்கும். ஆனால், வயது ஏற ஏற பல் தேய்வது, பற்களில் சிதைவு வருவது, பல் சொத்தையாவது நடக்கும். இதற்கெல்லாம் காரணம் நமது பற்கள் இடையே உள்ள இடைவெளியில் நாம் உண்ணும் உணவின் துகள்கள் தங்குவது.

குறிப்பாகச் சமைத்த உணவுகள், மாவுச்சத்து அதிகமுள்ள அரிசி, சப்பாத்தி, இட்லி, பொங்கல், பூரி, தோசை, பரோட்டா, உப்புமா போன்ற அனைத்தும், இனிப்பு உணவுகள் இந்த இடைவெளிகளில் தங்கும். இந்த உணவு துகள்கள் பாக்டீரியா கிருமிகளால் தாக்கப்பட்டுச் சிதைக்கப்படும். மேலும் இந்த பாக்டீரியா எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதை எப்படி நிறுத்துவது, எண்ணெய் கொப்பளிப்பு பயிற்சியால் முற்றிலுமாக இப்பிரச்சனை நீங்கும்.

உமிழ்நீர்

நம் உமிழ்நீர் நம்மை எப்படிப் பாதுகாக்கும்?

நம் உமிழ்நீரில் நீர், சளி, தாது உப்புக்கள் உள்ளன. உணவில் உள்ள மாவுச்சத்தைச் செரிக்கச் செய்யும் டயலின் மற்றும் கிருமிகளை அழிக்கும் லைசோசைம் உள்ளன. இவற்றில் தாது உப்புக்கள் மென் காரத்தன்மை உள்ளவை. இது இயற்கையாகவே வாயில் உள்ள மென் திசுக்கள், பற்களுக்கும் தீங்கு ஏற்படாமல் பாதுகாக்கும். எண்ணெயுடன் சேர்த்து உமிழ்நீர் நமக்குக் கிருமிகளை அழித்து முழு பாதுகாப்பைத் தருகிறது.

தொண்டைப்பகுதி

எண்ணெய் கொப்பளிப்பு செய்யாதவரின் உடலின் நடப்பது என்ன?

நாள்தோறும் இரவு படுக்கச் செல்லும் முன் பற்களுக்கு இடையே உள்ள உணவுத்துகள்கள் தங்கி இருக்கும். அப்படி இருப்பதை நுண் கிருமிகள் உண்டு வளர்ந்து, பெருகி பற்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கும்.

இதனுடன் பற்களில் இருப்பது போல நம் உணவோடு சேர்ந்து வயிற்றுக்குள்ளேயும் சென்றுவிடும். இதனால் வயிறு, குடல் தொடர்பான நோய்கள் வரும்.

நமது தொண்டைப்பகுதி

நாசிக்குழாய்

மூக்குக்குழாயின் ஆரம்பம் லாரின்க்ஸ்

நடுச்செவி

இணையும் குழாய்

ஆகியவற்றின் சந்திப்பால் வாயில் பெருகிய நுண்கிருமிகள் மேற்கூறிய பகுதிகளுக்கும் பரவும். இந்தப் பகுதிகளில் பிரச்சனைகள், நோய்கள் வரும்.

நுரையீரல்

மூச்சுக்குழாய், நுரையீரல் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

மேலும் கிருமிகள் வாயில் பல்கி பெருகுவதால் உடல் மெலிவு, இதயக் கோளாறுகள், மூட்டுக் கோளாறுகள், இனவிருத்தி உறுப்புகளும் பாதிக்கப்படும். எனவே வாயின் நுண்கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்க ஒரே இயற்கை வழி, எண்ணெய் கொப்பளிப்பு எனும் எளிய பயிற்சி மட்டுமே.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?