Diabetes Patients

 

Facebook

ஹெல்த்

சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா? எந்தெந்த உணவுகள் ரத்தத்தில் வேகமாக கலக்கும்?

ஒரு கார் இயங்குவதற்கு பெட்ரோல் தேவை. அதுபோல, இந்த உடல் இயங்குவதற்குச் சத்துக்கள் தேவை. அதில் ஒரு முக்கியப் பொருள் ‘கார்போஹைடிரேட்’ எனும் இனிப்புப் பொருள் தேவையாக உள்ளது. நாம் சாப்பிடும் அரிசி, கோதுமை, கிழங்குகள், தேன், பழங்கள், நாட்டு சர்க்கரை போன்றவற்றில் கார்போஹைடிரேட் உள்ளது.

மினு ப்ரீத்தி

தாமஸ் வில்லிஸ் என்ற மருத்துவர் வாயில் வைத்து சிறுநீரை சுவைத்துப் பார்த்தாராம். இவர் 1670-ல்தான் சர்க்கரை நோய் கண்டுபிடித்தார். ஆனால், பண்டைய மருத்துவ நிபுணர் ‘சாரக்கா’ என்பவர் 2500 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து அதற்கு ‘மதுமேகா’ (இனிப்பான மூத்திரம்) என்ற பெயரும் வைத்தாராம். கொழுப்பையும் இனிப்பையும் உடல் சரிவரப் பயன்படுத்த திணறுகின்ற ஒரு நோய் எனச் சரியாகக் கணித்துள்ளார்.

Honey

சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா?


ஆங்கில மருத்துவர்கள் அவர்கள் படித்த அலோபதி சிஸ்டம்படி தேன் சாப்பிட கூடாது என்கிறார்கள். ஆனால், சித்தர் பாடல்களில், “தேன் நாவிற்கு இனிப்பு, உடம்பிற்குக் கசப்பு” என்று குறிப்பிட்டு இருக்கிறது. தேனைப் பயப்படாமல் சாப்பிடலாம் என்கிறது மற்ற மருத்துவ முறைகள். தேன் உடம்பில் சேரும்போது கசப்பாகச் சேரும். அந்தக் காலத்தில் இருந்த பல்வேறு வைத்தியங்கள் தேனைச் சார்ந்தோ தேன் கலந்தோதான் மருந்தாகக் கொடுக்கப்பட்டன.

நாவல் பழம் 

நாவல் பழக்கொட்டையில் கஷாயம் செய்து, தேன் கலந்து சாப்பிட சர்க்கரை நோய் குணமாகும்.

சிலந்தி நாயகம் இலை, சுத்தமான பசும் பால், பசு நெய், தேன் கலந்து சாப்பிட சர்க்கரை நோய் சரியாகும்.

சிறுகுறிஞ்சான் தூள், நாவல் கொட்டை தூள், தேன் கலந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் நீங்கும்.

நெல்லிக்காயும் தேனும் கலந்து சாப்பிட சர்க்கரை நோய் சரியாகும்.

அதிமதுரத்தூள், தேனும் சர்க்கரை நோய்க்கு மருந்தாகும்.

பூண்டும் தேனும் சர்க்கரை நோயை அழிக்கும்.

சீந்தில் செடியில் சாறு எடுத்து மஞ்சள் தூள் சிறிது போட்டு, தேன் கலந்து சாப்பிட சர்க்கரை நோய் குணமாகும்.

வேலமரப்பட்டை சாற்றை எடுத்து தேன் கலந்து சாப்பிட சர்க்கரை நோய் தீரும்.

தேன், சுத்தமான தேனாக இருக்க வேண்டும். கலப்படமான தேன் பலன் அளிக்காது. குளுக்கோஸ் கலந்து கலப்படம் செய்யப்பட்ட தேனை குடித்தால் மேற்சொன்ன பலன்கள் கிடைக்காது. சுத்தமான தேன் பெரும்பாலான நோய்களைக் குணப்படுத்தும் என்பது உண்மை.

diabetes patient

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டியவை

குறைவான கலோரிகள் மற்றும் கார்போஹைடிரேட் சத்துகள் கொண்ட உணவுகள் உண்டால் சர்க்கரை நோயை மிக விரைவில் கட்டுப்படுத்திக் குணப்படுத்தி விடலாம்.

கிளைசமிக் இண்டெக்ஸ் என்ற அட்டவணைப்படி, ரத்தத்தில் மெதுவாகக் கலக்கும் உணவுகள், வேகமாகக் கலக்கும் உணவுகள் எனப் பட்டியலிடுகின்றனர். இதில் 55 வரை உள்ள உணவுகள் ரத்தத்தில் மெதுவாக குளுகோஸாகக் கலப்பவை. 56-69 வரை உள்ள உணவுகள் நடுத்தரமானவை. 70-க்கு மேல் உள்ள உணவுகள் ரத்தத்தில் வேகமாகக் கலக்கும் உணவுகள்.

காராமணி, சுரைக்காய்

மிக மெதுவாக குளுக்கோஸை ரத்தத்தில் கலக்கும் உணவுகள்

வெள்ளரி பிஞ்சு, வெள்ளரிக்காய்

எலுமிச்சை

முருங்கை, முருங்கை கீரை

மணத்தக்காளி

பசலைக்கீரை

புதினா

பருப்புக்கீரை

அகத்திக்கீரை

பொன்னாங்கண்ணி

வாழைத்தண்டு, வாழைப்பூ

முட்டைக்கோஸ், நூல்கோல், சௌ சௌ

முள்ளங்கி, வெங்காயம்

வெண்டைக்காய்

பீர்க்கு, புடலை, கத்திரி

பாகற்காய், கோவைக்காய்

அவரை, கொத்தவரை, பீன்ஸ்

காராமணி, சுரைக்காய்

இதெல்லாம் கிளைசமிக் இண்டெக்ஸ் எண்ணில் 30-க்கும் கீழ் வரும் உணவுகள். எனவே, தாராளமாக சாப்பிடலாம்.

சிறு கடலை பருப்பு வகைகள்

மெதுவாக குளுக்கோஸை ரத்தத்தில் கலக்கும் உணவுகள்

முந்திரி

சிறு கடலை பருப்பு வகைகள்

செர்ரி பழம்

ஆப்பிள்

தக்காளி

சாத்துக்குடி, கிர்ணிப்பழம்

பப்பாளி, கொய்யா

அன்னாசி, தர்பூசணி

இதெல்லாம் 40-க்கும் கீழ் வரும் உணவுகள். எனவே, இவற்றையும் சாப்பிடலாம்.

முக்கனிகள் 

நடுத்தரமான வேகத்தில் கலக்கும் உணவுகள்

மா, பலா, வாழை

கேரட், ஆப்பிள்

புழுங்கல் அரிசி

தேன்

கோதுமை

நாட்டு சர்க்கரை

இவை 40-69 வரை வருவதால் நடுத்தரமான வேகத்தில் ரத்தத்தில் கலக்கின்றன.

நொறுக்குத் தீனிகள்

வேகமாக ரத்தத்தில் கலக்கும் உணவுகள்

உருளைக்கிழங்கு வறுவல்

அரிசி, கோதுமையில் செய்த நொறுக்குத் தீனிகள்

எண்ணெயில் பொரித்த அனைத்தும்

நொறுக்குத் தீனிகள் அனைத்தும்

பாக்கெட் உணவுகள்

பதப்படுத்திய உணவுகள்

பிரெட்

பச்சரிசி

கிழங்கு வகைகள்

69 - ஐ தாண்டிய எண்கள் மிக வேகமாக குளுக்கோஸை ரத்தத்தில் கலக்கும் உணவுகள்

அரிசியைவிடக் கோதுமையைவிடக் குறைந்த மதிப்பெண்களில், அதாவது நடுத்தர வேகத்தில் கலக்கின்ற ‘எண் 58’ தேனாகும். இதனால், சர்க்கரை நோயாளிகள் சுத்தமானத் தேனைச் சாப்பிடலாம் என்கிறது அமெரிக்க நீரிழிவு சங்கம்.

மேலும், சத்துணவு பேராசிரியர் டாக்டர். ஜேம்ஸ் கார்பண்டர் சொல்வது, “ சர்க்கரைக்கும் தேனுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் அதை உடம்பு உறிஞ்சிக்கொள்ளும் விதத்தில் உள்ளது. சக்கரையில் உள்ள சுக்ரோஸ் என்ற இனிப்பு செரிக்கபட்டு குடலால் உறிஞ்சப்பட்டுத் திடீரென்று அதிக அளவில் ரத்தத்தில் கலக்கிறது. எனவே, இதைக் கட்டுப்படுத்த அதிக அளவில் இன்சுலின் தேவைப்படுகிறது. ஆனால், தேனில் ஒற்றைச் சர்க்கரையாகிய குளுகோஸ், பழ சர்க்கரையாகிய ஃப்ரக்டோஸ் இருந்தாலும் தேனில் உள்ள மற்ற சர்க்கரைகளாகிய கடின சர்க்கரைகள் திடீரென்று ரத்தத்தில் கலக்க முடியாது. மெதுவாகக் கலப்பதால் திடீரென்று இன்சுலின் சுரப்பு தேவையில்லை. எனவே, மாவுச்சத்துகள் கொண்ட உணவுகளைக் குறைத்துக்கொண்டு தேன் தேவையான அளவு சாப்பிடலாம். ஏனெனில், தேன் உணவும் மருந்தும் ஆகும்.

சுத்தமான தேன், புளிப்பு சுவையும் துவர்ப்பு சுவையும் இனிப்பு சுவையும் கொண்டதாக இருக்கும். 180 மருந்து பொருட்கள் கொண்டது சுத்தமான தேன். அதைத் தேவையான அளவில் சாப்பிடுங்கள். அதிகளவில் இல்லை. சர்க்கரை நோய்க்குச் சிறந்தது தேன் என அலோபதி தவிர மற்ற வைத்திய முறைகள் சொல்கின்றன.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?